முகப்பு » சேரும் இடங்கள் » புபனேஷ்வர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01காந்தி பார்க்

  காந்தி பார்க்

  காந்தி பார்க் எனும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் மஹாத்மா காந்தி அவர்களது பெயரில் அமைந்துள்ளது. இது புபனேஷ்வர் நகர வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  புபனேஷ்வர் நகரத்தில் உள்ள ஸ்வோஸ்தி பிளாசா ஓட்டலுக்கு எதிரே இந்த பூங்காவை காணலாம். அழகிய புல்வெளிகள் மற்றும் அலங்கார அம்சங்களுக்கு இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

  இந்த பூங்காவில் தியானத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் மஹாத்மா காந்தி சிலையை பார்க்கலாம். பூங்காவின் சூழலுக்கு ஒரு கம்பீர தோற்றத்தை அளிக்கும் வகையில் இந்த சிலை வீற்றிருக்கிறது.

  காலைநேர ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, இயற்கைச்சூழல் ரசனை, காற்று வாங்கல் போன்றவற்றுக்கு இந்த பூங்கா மிகவும் ஏற்றதாக உள்ளது.

  முன்னர் ஜண்டா மைதான் என்று அழைக்கப்பட்ட ஒரு மைதானத்தில்தான் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புல்வெளிகள், ஓட்டப்ப்பாதைகள், நீரூற்றுகள் மற்றும் விளக்கு அமைப்புகள் போன்றவை இந்த பூங்காவின் சிறப்பம்சங்களாகும்.

  + மேலும் படிக்க
 • 02தௌலிகிரி

  தௌலிகிரி எனும் இந்த மலைப்பகுதி புபனேஷ்வர் நகரில் மற்றொரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் பொறிக்கப்பட்ட பாறைக்கல்வெட்டு ஆணை ஒன்று இந்த மலையில் காணப்படுகிறது. காலத்தால் அழியாது காட்சியளிக்கும் இந்த பாறைக்கல்வெட்டு 3ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது ஒரு வியக்கத்தக்க உண்மையாகும்.

  தௌலிகிரி ஸ்தலம் வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. மேலும், ரம்மியமான இயற்கைச்சூழலின் நடுவே ஒரு அமைதி ஸ்தலமாகவும் இந்த தௌலிகிரி மலைப்பகுதி காட்சியளிக்கிறது. நெடுநேரம் அமர்ந்து இயற்கைச்சுழலை ரசிப்பதற்கு இது மிகவும் ஏற்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்த தௌலிகிரி மலைப்பகுதியில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கப்போர் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில் புத்த மதச்சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.

  இந்த மலையின் உச்சியில் ஒரு வெந்நிற பகோடா கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. 1970ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த பகோடா கோயில் மலையின் அழகுக்கு அழகூட்டும் வகையில் வீற்றிருக்கிறது.

  + மேலும் படிக்க
 • 03ராஜாராணி கோயில்

  புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த ராஜாராணி கோயில் புராதன கட்டிடக்கலைஞர்களின் திறமைக்கு சான்றாக வீற்றிருக்கிறது. 11ம் நூற்றாண்டில் மத்தியில் கட்டப்பட்ட இந்த கோயில் லிங்கராஜ் கோயிலுக்கு வடகிழக்கே அமைந்துள்ளது.

  இதன் கருவறையில் எந்த தெய்வச்சிலையும் வைக்கப்படாது வெறுமையாக காட்சியளிப்பது இந்த கோயிலின் ஒரு தனித்தன்மையான அம்சமாக கூறப்படுகிறது. இது மன்மதக்கலைக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

  ஏனெனில் இந்த கோயிலைச்சுற்றிலும் ஆண் பெண் சிருங்கார சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிற மணற்பாறைக்கற்களால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  இந்திய தொல்லியல் துறை இக்கோயில் வளாகத்தை பராமரித்து நிர்வகிப்பது மட்டுமல்லாமல் நுழைவுக்கட்டணம் ஒன்றையும் பார்வையாளர்களிடம் வசூலிக்கிறது.

  + மேலும் படிக்க
 • 04கரவேலா பார்க்

  கரவேலா பார்க்

  புபனேஷ்வர் நகரில் நன்கு பராமரிக்கப்பட்டு வரும் பூங்காக்களில் இந்த கரவேலா பார்க் என்றழைக்கப்படும் பூங்காவும் ஒன்று. அழகிய நடைபாதைகள், ஓட்டப்பாதைகள், அமர்ந்து ஓய்வெடுப்பதற்கான பெஞ்சுகள் என்று இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ளன.

  பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக ஓய்வு நேரத்தை கழிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அலங்காரமான மலர்ச்செடி அமைப்புகள், பல்வேறு தாவரங்கள், பச்சை வேலிகள், நீர்த்தெளிப்பு அமைப்புகள், தடாகங்கள் போன்றவை இந்த பூங்காவில் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

  நகரத்தை சுற்றிப்பார்த்து களைப்படைந்த பயணிகள் இந்த பூங்காவில் சற்று ஓய்வெடுக்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

  புபனேஷ்வர் நகர வளர்ச்சி ஆணையம் இந்த பூங்காவை தனது பராமரிப்பில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் இந்த பூங்கா திறக்கப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 05நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க்

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க்

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க் எனும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரின் மற்றொரு அழகுப்பூங்காவாகும். மிகச்சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இது அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.

  புபனேஷ்வர் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த பூங்காவில் நடைப்பாதைகள், நீர்த்தெளிப்பான்கள், விளக்கு அமைப்புகள், ஓட்டப்பாதைகள் போன்றவை சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  பார்வையாளர்கள் வசதிக்காக பெரிய இருக்கைகளும் பூங்காவில் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ளன. சுத்தமான காற்று மற்றும் பசுமையான சூழல் போன்றவறை கொண்டுள்ள இந்த பூங்கா பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் காட்சியளிக்கிறது.

  உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த பூங்காவிற்கு தினமும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் இந்த பூங்கா பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 06உதயகிரி & கண்டகிரி குகைகள்

  உதயகிரி & கண்டகிரி குகைகள் புபனேஷ்வர் நகரத்தின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். புபனேஷ்வர் நகரத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த இரட்டை மலைகள் சாந்தமான சூழலின் நடுவே வீற்றிருக்கின்றன.

  முற்காலத்தில் இந்த மலைகளில் புகழ்பெற்ற ஜைன மடாலயங்கள் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மலைகளின் உச்சிப்பகுதியில் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவறை குகைகள் காணப்படுகின்றன.

  இந்த குகை அமைப்புகளை இன்றும் பயணிகள் பார்க்கலாம். இவை கி.மு 2ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  இந்த குகைகள் சிலவற்றில் சில சிற்பப்பொறிப்புகளும் காணப்படுகின்றன. ராணி கும்பா எனப்படும் இரண்டு அடுக்கு கொண்ட குகை அமைப்பும் இந்த அமைப்புகளில் இடம் பெற்றுள்ளது.

  இந்த ராணிகும்பா குகையில் விரிவான அலங்கார சித்திரப்பொறிப்புகள் செய்யப்பட்டுள்ளன. மற்றும் ஒரு பெரிய குடைவறை அமைப்பு யானைக்குகை அல்லது ஹாத்தி கும்பா என்று அழைக்கப்படுகிறது. மொத்தமாக உதய்கிரி மலையில்18 குடைவறை அமைப்புகளும் கண்டகிரி மலையில் 15 குடைவறை அமைப்புகள் அமைந்துள்ளன.

  + மேலும் படிக்க
 • 07தேராஸ் அணை

  தேராஸ் அணை

  தேராஸ் அணை எனப்படும் இந்த நீர்த்தேக்கம் புபனேஷ்வர் நகரின் எல்லைப்பகுதியில் சந்தகா தேசியப்பூங்காவை ஒட்டி உள்ளது. இது ஒடிஷா மாநிலத்திலுள்ள மூன்றாவது பெரிய அணையாக அறியப்படுகிறது.

  இந்த அணைப்பகுதியின் இயற்கை அழகு மனம் மயக்கும் எழிலுடன் காட்சி அளிக்கிறது. எனவே பயணிகள் இப்பகுதியின் நிசப்தமான சூழலில் ஏகாந்தமாக பொழுதைக்கழிக்க விரும்புகின்றனர்.

  மழைநீர் தேக்கப்பட்ட ஒரு நீர்த்தேக்கமாக இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது. அணைக்கு அருகேயுள்ள ஒரு மலையுச்சியில் காட்டேஜ் தங்குமிட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

  இங்கிருந்து சுற்றிலும் காணப்படும் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பது எளிதாக உள்ளது. இந்த காட்டேஜ் அமைப்பில் வசிப்பிட வசதிகள் யாவும் கொண்ட மூன்று குடில்கள் இடம் பெற்றுள்ளன.

  அணையைச்சுற்றி 40 கி.மீ தூரத்துக்கு காட்டுச்சுற்றுலா வசதியும் பயணிகளுக்காக வழிகாட்டிகள் துணையுடன் அளிக்கப்படுகிறது. பகல் பொழுதை அணைப்பகுதியில் கழித்துவிட்டு இரவில் இங்குள்ள குடிலில் தங்கி ஓய்வெடுக்கலாம்.  தேராஸ் அணைப்பகுதி வருடத்தின் எல்லா நாட்களிலும் விஜயம் செய்வதற்கேற்ற சூழலைக்கொண்டுள்ளது.

  + மேலும் படிக்க
 • 08தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

  தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ்

  தி மியூசியம் ஆஃப் டிரைபல் ஆர்ட் அன்ட் ஆர்ட்டிஃபாக்ட்ஸ் எனப்படும் இந்த அருங்காட்சியகம் டிரைபல் மியூசியம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. புபனேஷ்வர் நகர ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இந்த மியூசியம் அமைந்துள்ளது.

  ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள் குறித்த பல்வேறு தகவல்களை இந்த மியூசியத்தில் பார்வையாளர்கள் தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மியூசியம் டிரைபல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் பழங்குடி ஆராய்ச்சி மையமாகவும் இயங்கி வருகிறது.

  அதாவது பழங்குடி மக்கள் தொடர்பான பல்வேறு இந்த மையத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒடிஷா மாநிலத்தில் மட்டும் 60 வகையான பழங்குடி இனக்குழுக்கள் வசிப்பதாக இம்மையத்தின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

  இந்த அருங்காட்சியகத்தில் மரச்சிற்பங்கள், உலோகப்பொருட்கள், துணி வகைகள், ஆபரணங்கள் போன்றவற்றை பயணிகள் பார்க்கலாம்.

  ஒரு நூலகம் மற்றும் ஒரு சிறிய விலங்குக்காட்சியகம் போன்றவையும் இந்த அருங்காட்சியக வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இது பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது. இதன் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.

  + மேலும் படிக்க
 • 09இஸ்க்கான் கோயில்

  இஸ்க்கான் கோயில்

  புபனேஷ்வர் நகரத்தின் மையப்பகுதியில் இந்த இஸ்க்கான் கோயில் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இஸ்க்கான் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலில் கிருஷ்ணர், பலராமர், ஜகந்நாதர், கௌரா நிதய் மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.

  புபனேஷ்வர் நகரத்தில் இஸ்க்கான் (ISKCON)) அமைப்பின் ஆன்மீக செயல்பாடுகள் வெகு தீவிரமாக இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள இரண்டு இஸ்க்கான் மையங்களில் ஒன்று ஸ்வர்க் துவாரா பகுதியிலும் மற்றொன்று புறநகர்ப்பகுதியிலும் அமைந்துள்ளன.

  ஏராளமான கிருஷ்ண பக்தர்கள் இந்த இஸ்க்கான் கோயிலுக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணர் மற்றும் ஜகந்நாஹர் தொடர்பான திருவிழா நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

  புவனேஷ்வர் நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருமே இந்த இஸ்க்கான் கோயிலுக்கு விஜயம் செய்ய தவறுவதில்லை.

  எல்லா இஸ்க்கான் கோயில்களை போன்றே இங்கும் பூஜைகள் மற்றும் பஜனைகள் தினசரி குறித்த நேரத்துக்கு நடத்தப்படுகின்றன. ஒரு அலுவலகத்தை போன்று நேர்த்தியாக இந்த கோயிலின் பராமரிப்பு மற்றும் நிர்வாக நடைபெறுவது பார்வையாளர்களை கவரக்கூடிய அம்சமாகும்.

  + மேலும் படிக்க
 • 10ஒரிசா ஸ்டேட் மியூசியம்

  ஒரிசா ஸ்டேட் மியூசியம் எனப்படும் இந்த மாநில அரசு அருங்காட்சியகம் புரஃபசர் கன்ஷியாம் டாஷ் மற்றும் ராவென்ஷா கல்லூரியை சேர்ந்த புரஃபெசர் என்.சி. பானர்ஜி ஆகியோரின் முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

  இந்த மியூசியத்திற்கான தொல்பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் 1932ம் ஆண்டிலிருந்து இவர்கள் ஈடுபட்டிருந்தனர். பின்னர் 1938ம் ஆண்டில் ஒடிஷா அரசாங்கம் இதனை தனது கட்டுப்பாட்டிற்குள் ஏற்றுக்கொண்டது. அக்காலத்தில் இது புரவின்சியல் மியூசியம் என்று அழைக்கப்பட்டது.

  முதலில் சிறிய அளவில் துவக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் சேகரிப்பு நாளடைவில் பெருகி இது பிரசித்தமான ஒன்றாக மாறியது. இங்குள்ள சேகரிப்புகளில் சிலைகள், நாணயங்கள், சுடுமண் சிற்பங்கள், உலோகப்பொருட்கள், கலைப்பொருட்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

  கட்டக் பகுதியில் அமைந்திருந்த இந்த மியூசியம் 1947-48ம் ஆண்டுகளில் தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. 1960ம் ஆண்டிலிருந்து இந்த மியூசியம் ஒரிசா ஸ்டேட் மியூசியம் என்ற பெயரில் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.

  + மேலும் படிக்க
 • 11நந்தன்கானன் விலங்குக்காட்சி சாலை

  நந்தன்கானன் ஜூ எனப்படும் இந்த விலங்குக்காட்சி சாலை ஒரு தாவரவியல் பூங்காவையும் உள்ளடக்கியதாக 400 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1979ம் ஆண்டு இது பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.

  தற்போது புபனேஷ்வர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக இந்த நந்தன்கானன் விலங்குக்காட்சி சாலை பிரசித்தமாக அறியப்படுகிறது.

  குழந்தைகளுடன் புபனேஷ்வர் நகரத்திற்கு விஜயம் செய்பவர்கள் அவசியம் இந்த பூங்காவுக்கு வரலாம். பசுமையான சந்தகா-தம்பரா காட்டுயிர் சரணாலயம் மற்றும் கஞ்சிதா ஏரிக்கு நடுவே இந்த நந்தன்கானன் விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்கா அமைந்திருக்கிறது.

  தனது பெயருக்கேற்றபடி இந்த அற்புத தோட்டப்பூங்காவாக இந்த நந்தன்கானன் காட்சியளிக்கிறது. இங்குள்ள விலங்குகாட்சி சாலையில் பல்வேறு காட்டு விலங்குகள் மட்டுமல்லாது அரிய வகை மரங்கள் மற்றும் தாவரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

  126 வகையான விலங்குகள் இங்கு வசிக்கின்றன. நல்ல முறையில் இவை பாதுகாக்கப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் அதிக எண்ணிக்கையில் இங்கு பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழா நாட்களில் இன்னும் அதிகமான மக்கள் திரளாக வருகை தருகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 12முக்தேஷ்வர் கோயில்

  ஒடிஷா மாநிலத்தலைநகரான புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த முக்தேஷ்வர் கோயில் 10 நூற்றாண்டை சேர்ந்த கோயிலாகும். நகரத்தின் மற்றொரு முக்கியமான அடையாளமாக இக்கோயில் வீற்றிருக்கிறது. இந்த கோயிலை சுற்றிலும் காணப்படும் அற்புதமான சிற்பக்கலை அம்சங்களுக்காக இது புகழ் பெற்றுள்ளது.

  சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் முக்தேஸ்வரர் எனும் ரூபத்தில் சிவபெருமான் வீற்றுள்ளார். முக்திக்கான கடவுள் என்பது இந்த பெயரின் பொருளாகும்.

  இக்கோயில் வளாகத்தில் ஒவ்வொரு வருடமும் நடனத்திருவிழா ஒன்று பிரசித்தமாக மூன்று நாட்களுக்கு நடத்தப்படுகிறது. சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காக இந்த நடனத்திருவிழா ஒடிஷா அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது.

  ஒடிஷா மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமான ஒடிசி நடனத்திற்கு இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் இந்த முக்தேஷ்வர் கோயில் வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 13ஐ.எம்.எஃப்.ஏ பார்க்

  ஐ.எம்.எஃப்.ஏ பார்க்

  ஐ.எம்.எஃப்.ஏ பார்க் என்றழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள பூங்காக்களிலேயே மிக அழகான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது சாஹித் நகர் பகுதியில் அமைந்துள்ளது. எல்லா பூங்காக்களையும் போலவே இது மக்கள் அமைதியாக ஓய்வெடுக்க உதவும் இயற்கை ஸ்தலமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

  ரம்மியமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த பூங்காவில் பசுமையான புல்வெளிகள், மலர்ச்செடிகள் மற்றும் இதர தாவரங்கள் கண்களுக்கு இதமாக காட்சியளிக்கின்றன. விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இந்த பூங்காவில் வசதிகள் உண்டு.

  இங்குள்ள கூடைப்பந்து மைதானம் நல்ல இளம் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சிக்களமாக விளங்குகிறது. அமைதியான சூழலில் நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்பும் உள்ளூர் மக்கள் இங்கு அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். குழந்தைகள் விருப்பத்துடன் விளையாடி மகிழும் இடமாகவும் இது விளங்குகிறது.

  + மேலும் படிக்க
 • 14ஷாப்பிங்

  ஷாப்பிங்

  ஷாப்பர்ஸ் பாரடைஸ் என்றழைக்கப்படும் புபனேஷ்வர் நகரில் ஷாப்பிங் செய்வதும் ஒரு இனிமையான அனுபவம். சிறிய ஞாபகார்த்த பொருளோ அல்லது விலை உயர்ந்த அலங்கார கைவினைபொருளோ எதுவானாலும் இங்கு சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்க ஏராளம் கிடைக்கின்றன.

  பல்வேறு வகையான ஒடிஷா மாநில கலைப்பொருட்கள் இந்நகரின் கடைத்தெருக்களில் விற்கப்படுகின்றன. இவை யாவற்றிலும் பாரம்பரியமான கைவினைக்கலை நுணுக்கங்கள் ஒளிர்கின்றன.

  எனவே இந்நகரத்துக்கு விஜயம் செய்யும் எல்லா பயணிகளுமே இந்த கலைப்பொருட்களில் மனதைப்பறிகொடுப்பதில் வியப்பே இல்லை. மேலும் கீழ்க்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை வாங்காமல் புபனேஷ்வர் நகர சுற்றுலா நிறைவு பெறுவதில்லை என்பதும் உண்மை.

  + மேலும் படிக்க
 • 15ஐ.ஜி பார்க்

  ஐ.ஜி பார்க்

  ஐ.ஜி பார்க் அல்லது இந்திரா காந்தி பார்க் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் உள்ள மற்றும் ஒரு அழகுப்பூங்காவாகும். இது பிரம்மாண்டமான 10.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

  புபனேஷ்வர் நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக திகழும் இது ஏ.ஜி ஸ்கொயர் எனும் இடத்தில் உள்ளது. இதன் பின்னணியில் ஒடிஷா மாநில அரசின் தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன.

  முன்னதாக இந்த பூங்கா ஸ்தலமானது அணிவகுப்பு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் அழகிய பூங்காவாக மாற்றப்பட்டு பொதுமக்கள் உபயோகத்திற்கு திறந்துவிடப்பட்டது.

  ஒரு வரலாற்று பின்னணியும் இதற்கு உண்டு. அதாவது, மறைந்த பாரதப்பிரதமர் திருமதி இந்திரா அம்மையார் தனது கடைசி பொதுக்கூட்ட உரையை 1984ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி இந்த பூங்காவில்தான் நிகழ்த்தியுள்ளார்.

  பூங்காவின் உள்ளே அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவிற்கு பயணிகள் எப்போது வேண்டுமானாலும் விஜயம் செய்யலாம்.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Feb,Sun
Return On
19 Feb,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
18 Feb,Sun
Check Out
19 Feb,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
18 Feb,Sun
Return On
19 Feb,Mon