மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, ஜடேஜாவின் ஆட்சியாளரான ராவ் ஹமீர் அவர்களின் பெயரில் வழங்கப்பட்டு வரும் இந்த ஏரி, புஜ் நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.
புஜ் நகரின் பெரும்பாலான முக்கிய சுற்றுலா ஸ்தலங்களை தன் கிழக்குப்புறத்தே கொண்டுள்ள, இந்த 450 வருடப் பழமை வாய்ந்த ஏரியின் கரையோரத்தில் நடைப்பயணம் மேற்கொள்வது ஒரு இனிய அனுபவமாகும். இந்த நீர்நிலையின் மத்தியில் அமைந்துள்ள ஒரு வண்ணமயமான தோட்டம், இதனை மேலும் அழகுறச் செய்கிறது.



Click it and Unblock the Notifications