ஷரத் பௌக், 1991-ஆம் ஆண்டில் கட்ச்சின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரையில், அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை, அழகிய கலைப்பொருட்களை கொண்டிருப்பதோடு, பூக்கும் செடிகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடிகளுடன் கூடிய அழகிய தோட்டத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இதனாலேயே, புலம்பெயர்ந்து செல்லும் சிறகுடைய விருந்தினர்களான செந்நாரைகள் சில, ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த அரண்மனை, வெள்ளிக்கிழமை தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும் திறந்து வைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications