பிகானேர் நகரத்திலிருந்து 51கி.மீ தூரத்தில் கொலயாத் எனும் இடத்தில் அமைந்துள்ள இந்த கொலயாத் கோயில் ஒரு முக்கியமான கோயிலாக கருதப்படுகிறது. புகழ் பெற்ற வேதகால ரிஷியான கபில் இந்த கொலயாத் ஸ்தலத்திலுள்ள பீபால் மரத்தடியில் உயிர்நீத்ததாக ஐதீகமாக நம்பப்படுகிறது.
இங்குள்ள வெண்பளிங்கினால் ஆன கோயில்களைச்சுற்றி அழகான சிவப்புக்கல் மாடங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள பெரிய ஏரியில் 32 குளியல் துறைகள் காணப்படுகின்றன.
இவற்றில் மூழ்கி நீராடுவதை புனிதமாக பக்தர்கள் நம்புகின்றனர். கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் இங்கு வருடாந்திர திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் ஒரு கால்நடைச்சந்தையும் பிரபல்யமாக இங்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கொலயாத் நகரம் பிகானேர் நகரத்துடன் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications