பிகானேர் நகரத்திலுள்ள கோட்டே கேட் எனும் இந்த இடம் ஷாப்பிங் பிரியர்களுக்கான மார்க்கெட் பகுதியாகும். இங்கு பயணிகள் கலையம்சம் கொண்ட ராஜஸ்தானிய கைவினைப்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
ஒட்டகத்தோலினால் செய்யப்பட்ட பொருட்கள், குறு ஓவியங்கள், காதி பொருட்கள் மற்றும் மரச்செதுக்கு பொருட்கள் போன்றவையும் இங்கு அதிகமாக கிடைக்கின்றன. இவை தவிர, பயணிகள் இங்கு கிடைக்கும் சுவையான புஜ்ஜியா மற்றும் ரசகுல்லா போன்ற தின்பண்டங்களையும் ருசிக்கலாம்.



Click it and Unblock the Notifications