பிகானேர் நகரத்தின் மற்றொரு ஷாப்பிங் பகுதி இந்த ஸ்டேஷன் ரோடு எனப்படும் இடமாகும். இங்கு பயணிகள் பாரம்பரிய ராஜஸ்தானி கலைப்பொருட்களை பேரம் பேசி வாங்கலாம். இங்குள்ள கடைகளில் பலவிதமான பூவேலைப்பாடு கொண்ட ‘ஜூட்டி’ எனப்படும் காலணிகள், உள்ளூர் துணிவகைகள், தோல்பொருட்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் மரப்பொருட்கள் விற்கப்படுகின்றன.
மேலும், 24 மணி நேரத்தில் பிரத்யேகமாக தயாரித்து தரப்படும் பூவேலைப்பாட்டு காலணிகளையும் பயணிகள் இங்கு வாங்கிக்கொள்ளலாம். உணவுப்பிரியர்களுக்கும் இந்த இடம் உகந்ததாக உள்ளது. இங்கு ‘ஹல்திராம்ஸ்’ நிறுவனத்தின் முதல் கடை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டேஷன் ரோடுக்கு விஜயம் செய்யும் பயணிகள் ஷாப்பிங் மட்டுமல்லாமல் சுவையான புஜ்ஜியா மற்றும் இனிப்பு வகைகளையும் சுவைத்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications