சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் தலைமையகமாக மொய்ராங்க் இருந்தது. இந்திய சுதந்திரப்போராட்டம் மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றின் வரலாற்றுச் சாட்சியாக INA நினைவுக் கட்டிடம் விளங்குகிறது.
தற்போது, INA நினைவுக் கட்டிடம் இருக்கும் இந்த இடத்தில்தான், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்து ஃபாஜ் என்றழைக்கப்படும் இந்திய தேசியராணுவத்தின் கொடியை இந்திய மண்ணில் முதன்முதலில் ஏற்றினார்.
இங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவச்சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. மேலும் 1945-ல் மர்மமான முறையில் மரணமடைந்த அவர் பயன்படுத்திய பொருட்களும் அவரோடு தொடர்புடைய பொருட்களான அவரது பேட்ஜ்கள், கடிதங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இங்கு உள்ளது.
இக்கட்டிடம் தற்போது மிகவும் சிதிலமடைந்து கானப்படுகிறது. மத்திய அரசாங்கம் இதனைப் புனரமைப்பதற்கு பெருந்தொகையை ஒதுக்கியுள்ளது. எனினும் INA நினைவுக்கட்டிடமானது பார்க்கவேண்டிய ஒரு இடமாகும்.



Click it and Unblock the Notifications