கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும். உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் பூங்கா இதுவேயாகும்.
கிழக்கிந்தியாவிலுள்ள மிகப்பெரிய நந்நீர் ஏரியான லோட்டாக் ஏரியின் ஒருங்கிணைந்த பகுதியாக, கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்கா விளங்குகிறது. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் தங்கா நகருக்கு அருகில் இது அமைந்துள்ளது.
தற்போது இங்கு, எல்டு மான்கள் எனப்படும், கிளைகளுடன் கூடிய கொம்புகளை உடைய சாங்கை மான்கள் பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றன. இவை நடனமாடும் திறன் படைத்தவை என்பதால், இவற்றால், பிஷ்ணுபூருக்கும், மணிப்பூருக்கும் பெருமை கிடைக்கிறது.
கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவானது முன்னதாக சாங்கை மான்களுக்கான சரணாலயமாக இருந்தது. இவை அழிந்துவரும் உயிரினங்கள் என்பதால் இவற்றைப்பாதுகாக்கும் நோக்கத்துடன், இப்பூங்காவானது 1977-ல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.
கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவில், மான்கள், நீர்க்கோழிகள், மற்றும் நீர்க்கீரிகள் போன்ற உயிரினங்களும் பலவகையான பறவைகளும் காணப்படுகின்றன. கெய்புல் லாம்ஜாவ் தேசியப்பூங்காவின் தனித்தன்மையான சுற்றுச்சூழல் அமைப்பினால் இது மிதக்கிறது. இங்கு உள்ள பெரும்பான்மையான தாவரங்கள், பும்டி என்றழைக்கப்படும் மிதக்கும் தாவரங்களாகும்.
சுற்றுலாப்பயணிகள், இம்பாலிலிருந்து 53 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இவ்விடத்தை வந்தடையலாம். அக்டோபருக்கும் பிப்ரவரிக்குமிடைப்பட்ட காலத்தில், இங்கு வருவது சிறந்ததாகும்.



Click it and Unblock the Notifications