போத்கயா விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் கயா நகர விமான நிலையம் போத்கயாவிலிருந்து 7 கி.மீ தூரத்திலும், கயா ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. பீஹார் மாநிலத்தின் ஒரே சர்வதேச விமான நிலையமான இது சைனா, ஜப்பான், ஷீலங்கா போன்ற ஆசிய நாடுகளுக்கு விமான சேவைகளை கொண்டுள்ளது.