போர்டி கிராமத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உம்பர்காவ்ன் பகுதியில் இந்த விருந்தாவன் ஸ்டுடியோஸ் அமைந்துள்ளது.1975ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த படப்பிடிப்புத்தளம் 4 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது.
இதன் உள்ளே மூன்று படப்பிடிப்பு தளங்கள் உள்ளன. பெரும் வரவேற்பைப்பெற்ற புராணத் தொலைக்காட்சி தொடர்களான ராமாயணா மற்றும் மஹாபாரதா ஆகிய இரண்டும் இங்கு படமாக்கப்பட்ட பெருமையை இந்த விருந்தாவன் ஸ்டுடியோஸ் பெற்றுள்ளது.
இதர புராணத் தொலைக்காட்சித் தொடர்களான ராவண் மற்றும் ஜய் ஹனுமான் போன்றவையும் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications