பூந்தி நகருக்கு அருகிலுள்ள இந்த துகாரி எனும் இடம் இங்குள்ள கனக் சாஹர் ஏரிக்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்த ஏரிக்கு குளிர்காலத்தில் ஏராளமான புலம் பெயர் பறவைகள் வருகை தருகின்றன.
இந்த ஏரியின் கரையில் ஒரு சிறிய கோட்டையும் அமைந்துள்ளது. இதில் பூந்தி கலையம்ச பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் காணப்படுகின்றன. ராதை மற்றும் கிருஷ்ணர் பற்றிய சிருங்காரக்கதையான ராஸலீலா பற்றிய விவரிப்புகள் இந்த ஓவியங்களில் இடம் பெற்றுள்ளன.



Click it and Unblock the Notifications