சுற்றிலும் ஆரவல்லி மலைத்தொடரால் சூழப்பட்டு காட்சியளிக்கும் இந்த ராமேஷ்வர் கோயில் சிவபெருமானுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் பசுமையான மலைகள் காணப்படுவதால் இது தற்சமயம் ஒரு பிக்னிக் ஸ்தலமாகவும் மாறியுள்ளது.
கீழே ஒரு தடாகத்தோடு கூடிய ஒரு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் இங்கு அமைந்திருப்பதால் இப்பிரதேசம் இயற்கை வனப்புடன் காட்சியளிக்கிறது. இங்குள்ள குகைகளில் காணப்படும் பாறை ஓவியங்கள் அக்கால மக்களின் கலையார்வத்தினை புலப்படுத்துகின்றன.



Click it and Unblock the Notifications