Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கலங்கூட் பீச் » ஈர்க்கும் இடங்கள் » கிளப் கபானா

கிளப் கபானா, கலங்கூட் பீச்

20

கோவாவில் உள்ள உல்லாச விடுதிகளில் எங்கு கேளிக்கையும், கொண்டாட்டமும் சிறப்பாக இருக்கிறது என்று பொதுமக்களிடம் கேட்டால் கண்டிப்பாக எல்லோரும் ஒருமனதாக கிளப் கபானா என்றுதான் சொல்வார்கள்.அதனால்தான் பாலிவுட் தொடங்கி ஹாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரும் விரும்பும் ஆசியாவின் மிகச் சிறந்த இரவு விடுதியாக கிளப் கபானா திகழ்ந்து வருகிறது.

இந்த விடுதி அமைந்திருக்கும் சூழ்நிலையே தனிக் கவர்ச்சிக்குரியது. இது திறந்தவெளி இரவு விடுதியாக, கடற்கரையோரத்தில், குன்றின் மீது காட்சியளிக்கும் தோற்றமே தனித்துவமானது.

அதோடு இரவு விடுதியின் நடுவே உள்ள மிகப்பெரிய நீச்சல் குளமும், ஜக்கூஸியும் பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்வன.  மேலும் இந்த இரவு விடுதியின் சில பகுதிகளில் காணப்படும் பனைமரங்கள் வெளிப்புறத்தில் உலாவுபவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

ஆனால் இவ்வளவு இருந்தும் இந்த விடுதியை பொறுத்தவரை அனைவரின் மனதிலும் ஓரே ஒரே குறை உள்ளது. அதற்கு காரணம் ஐரோப்பிய குடும்பத்துக்கு சொந்தமான இந்த விடுதி அக்டோபரிலிருந்து, ஏப்ரல் மாதம் வரையில் தான் திறந்திருக்கும் என்பதே.

கிளப் கபானா விடுதியின் உள்ளே செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக 1200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு நீங்கள் உள்ளே என்ன வாங்கினாலும் அதற்காக பணம் செலுத்த அவசியம் இல்லை.

இந்த கிளப்பில் ஒரே நேரத்தில் 3000 மக்கள் வரை கேளிக்கையில் ஈடுபடலாம். அதனால் சில சமயங்களில் மூச்சு விடக் கூட கஷ்டமாக இருக்கும். எனினும் இதனாலெல்லாம் கேளிக்கையின் சுகானுபவம் கெட்டு விடாது.

கிளப் கபானா கலங்கூட் பீச்சில் அமைந்திருப்பதால், இந்த விடுதியை அடைவது ஒன்றும் கடினமான காரியமில்லை. அதிலும் நீங்கள் சொந்த வாகனம் வைத்திருந்தால் விடுதியை அடைவது இன்னும் சுலபமாகிவிடும். ஆனால் நீங்கள் அதிகமாக மது அருந்துபவராய் இருந்தால் வாடகை கார்களே உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri