Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கலங்கூட் பீச் » ஈர்க்கும் இடங்கள் » மே டே டியூஸ் தேவாலயம்

மே டே டியூஸ் தேவாலயம், கலங்கூட் பீச்

20

மே டே டியூஸ் என்பதற்கு கடவுளின் அன்னை என்பது பொருள். இந்த தேவாலயம் வடக்கு கோவாவில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற காத்திக் பாணி கட்டிடமாகும். இதன் காரணமாக இது சலிகான் காத்திக் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தேவாலயம் 1873-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

கோவாவின் முக்கிய தேவாலயங்கள் எல்லாம் தெற்கு கோவாவில் அமைந்திருக்க, வடக்கு கோவாவில் கட்டப்பட்டிருக்கும் அற்புதப் படைப்பு மே டே டியூஸ் தேவாலயம். மேலும் பாகா, கலங்கூட், கேண்டலிம் பகுதிகளில் வாழும் மக்கள் இதை பெரும் பேறாக நினைக்கிறார்கள்.

மே டே டியூஸ் தேவாலயம் சிறியதாக இருந்தாலும் அதன் காத்திக் பாணி கட்டிடக்கலை எவரையும் தன்னழகில் சொக்க வைத்து விடும். மேலும், கோவாவின் கடற்கரைகள், ஷாப்பிங் பகுதிகள் என்று பரபரப்பு மிகுந்த பகுதிகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கு இந்த தேவாலயத்தின் அமைதி பேரானந்தமாக இருக்கும்.

மே டே டியூஸ் தேவாலயத்தின் புராதன வெண்ணிற தோற்றமும், காத்திக் பாணி கோபுர வடிவமைப்பும், வெள்ளி ஆலயமணியும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்கள்.

அதோடு புகைப்படக்காரகள் கேண்வாஸ் ஓவியங்களுக்கு நிகரான புகைபடங்களை இங்கு எடுப்பதற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். மேலும் தேவாலய வளாகத்துக்குள்ளே அமைந்திருக்கும் புகழ்பெற்ற நோஸா சென்ஹோரா ஆலயத்துக்கும் நீங்கள் நேரமிருந்தால் சென்று பார்க்கலாம். இந்த ஆலயம் பழைய மே டே டியூஸ் தேவாலயத்தின் சிதைவுகளிலிருந்து எழுப்பப்பட்டது ஆகும்.

மே டே டியூஸ் தேவாலயம் பனாஜியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில், மாபுஸா செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. அதோடு பனாஜி, வாஸ்கோ, மார்கோ போன்ற தெற்கு கோவா பகுதிகளிலிருந்து மே டே டியூஸ் தேவாலயத்தை வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம்.

அதுமட்டுமில்லாமல் வடக்கு கோவா பகுதிகளிலிருந்து கல்லெறியும் தூரத்திலேயே இந்த தேவாலயம் அமைந்திருப்பதால் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு நீங்கள் தேவாலயத்தை சிரமமின்றி அடைந்து விட முடியும்.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat