எப்படி அடைவது

சண்டிகர் நகருக்கு அருகிலுள்ள மாநிலங்களான டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாசலப்பிரதேசம் போன்றவற்றிலிருந்து சாலை மார்க்கமாக சண்டிகருக்கு பயணம் செய்வது சுலபமாக உள்ளது. அரசுப்பேருந்துகள் மற்றும் வால்வோ சொகுசுப்பேருந்துகள் போன்ற வெளிமாநிலப்பேருந்துகள் செக்டார் 43 மற்றும் செக்டார் 17ல் அமைந்திருக்கும் இன்டர்-ஸ்டேட் பெருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. ரென்ட் – எ – கார் சேவையும் சண்டிகருக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ளது. NH22 (அம்பாலா — கல்கா — ஷிம்லா ) மற்றும் NH21 (சண்டிகர் – லெ) ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் சண்டிகர் நகரின் முக்கிய இணைப்புச்சாலைகளாக அமைந்துள்ளன.