முகப்பு » சேரும் இடங்கள் » சண்டிகர் » ஈர்க்கும் இடங்கள்
 • 01சாத்பீர் வனவிலங்கு காட்சியகம்

  சாத்பீர் வனவிலங்கு காட்சியகம்

  சண்டிகர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் மொஹாலி மாவட்டத்தில் சண்டிகர் – ஜிராக்பூர் – பாடியாலா சாலையில் இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் அமைந்துள்ளது.

  1977ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி துவங்கப்பட்ட இந்த வனவிலங்கு காட்சியகம் ஆரம்ப காலத்தில் மஹேந்திர சௌதரி ஜுவாலஜிகல் பார்க் என்ற அழைக்கப்பட்டது. 202 ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ள இந்த வனவிலங்கு காட்சியகம் வடஇந்தியாவிலேயே அளவில் பெரியதாக சொல்லப்படுகிறது.

  இயற்கையான வனப்பகுதியை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கும் வனவிலங்கு காட்சியகத்தில் 85 வகையான பாலூட்டி விலங்குகள், பறவைகள் மற்றும் ஊர்வன விலங்குகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.

  950 உயிரினங்களை கொண்டுள்ள இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகத்தின் முக்கிய அம்சம் இங்குள்ள ராயல் பெங்கால் புலி ஆகும். இந்த வளாகத்தின் உள்ளே லயன் சஃபாரி, டிரைவ்-இன் டீர் சஃபாரி மற்றும் ஷாலோ லேக் போன்றவை முக்கியமான அம்சங்களாக பார்வையாளர்களால் விரும்பப்படுகின்றன.

  பல அபூர்வ வகை மரங்கள், மூலிகைத்தாவரங்கள் போன்றனவும் இந்த வளாகத்தில் காணப்படுவதால் இயற்கையான காட்டுச்சூழலில் வன விலங்குகளை பார்ப்பது போன்ற அனுபவத்தை இது பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

  திங்கள் கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த சாத்பீர் வனவிலங்கு காட்சியகம் திறந்துள்ளது.

  + மேலும் படிக்க
 • 03ரோஸ் கார்டன்

  ரோஸ் கார்டன் இந்த பூங்காத்தோட்டம் 1967ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே இது போன்ற மிகப்பெரிய பூங்காத்தோட்டம் இதுதான் எனும் பெருமையை இது பெற்றுள்ளது.

  ஜாகீர் ஹுசேன் ரோஸ் கார்டன் என்றும் அழைக்கப்படும் இந்த 17 ஏக்கர் பரப்பை கொண்ட பூங்காவில் 1600 வகைகளை சேர்ந்த 17000 ரோஜாச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.

  ரோஜாச்செடிகள் மட்டுமல்லாமல் பலவித மூலிகை தாவரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன. பாஹேரா, காம்பெர், பேல், ஹரார் மற்றும் மஞ்சள் குல்மொஹர் போன்றவை இவற்றில் அடக்கம்.

  நன்கு பரமாரிக்கப்பட்டு வரும் இந்த தோட்டப்பூங்காவில் வருடந்தோறும் ‘ரோஜா திருவிழா’ எனும் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த திருவிழா உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.

  மனம் மயக்கும் ரோஜா மலர்களால் ஜொலிக்கும் சண்டிகரின் தவறாமல் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான இந்த ரோஜாப்பூங்கா சுக்னா ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு நாளில் 5000 பார்வையாளர்கள் இந்த பூங்காத்தோட்டத்துக்கு விஜயம் செய்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 04நேப்லி

  நேப்லி

  கன்சால் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள இந்த நேப்லி எனும் வனப்பகுதி சண்டிகரின் வடக்கு எல்லையில் வீற்றிருக்கிறது. 3245 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வனப்பகுதி ஹரியானா மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

  கழுதைப்புலி, கலைமான், நில்கை மான், நரி மற்றும் முயல் போன்ற விலங்குகளை இந்த காட்டுப்பகுதியில் பார்க்கலாம். எனினும் இந்த பாதுகாப்பு வனச்சரகத்துக்குள் நுழைய சண்டிகர் வனப்பாதுகாப்பு அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டியுள்ளது.

  8 கி.மீ நீளமுள்ள ஒரு செங்குத்தான மலையேற்றப்பாதை இந்த வனப்பகுதியின் சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. இது நேப்லி வனப்பகுதியிலுள்ள ஓய்வு இல்லத்தையும் கன்சால் வனப்பகுதியிலுள்ள ஓய்வு இல்லத்தையும் இணைக்கிறது.

  + மேலும் படிக்க
 • 05மியூசியம் ஆஃப் எவோலுஷன் ஆஃப் லைஃப்

  மியூசியம் ஆஃப் எவோலுஷன் ஆஃப் லைஃப்

  மியூசியம் ஆஃப் எவோலுஷன் ஆஃப் லைஃப் எனும் இந்த ‘உயிர் பரிணாம வளர்ச்சி அருங்காட்சியகம்’ 1973ம் ஆண்டில் கவர்ன்மெண்ட் மியூசியம் & ஆர்ட் கேலரி வளாகத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

  இண்டஸ் பள்ளத்தாக்கு நாகரிகம் முதல் இன்றைய நவீன நாகரிகம் வரையிலான மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி இங்கு விசேஷ காட்சியமைப்புகள் மற்றும் ஓவியங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

  மேலும் புவியில் ஒற்றைச்செல் உயிரி தோன்றி படிப்படியாக பல்லுயிர்ப்பெருக்கமாக வளர்ச்சியடைந்திருப்பது குறித்த காட்சி விளக்க அமைப்புகளை இங்கு காணலாம். இந்த பரிணாம வளர்ச்சி அருங்காட்சியகத்தில் முதல் கூடத்தில் மின்காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

  அவற்றை அடுத்து வானியல், தொல்லியல், கற்காலப்பிரிவு மற்றும் புவியியல் பிரிவு ஆகியவை அமைந்துள்ளன. இவை தவிர ஒரு நூலகமும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.

  இதில் பரிணாம வளர்ச்சி தொல்லியல் பாறை படிவங்கள் மற்றும் புவியியல் குறித்த நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. திங்கள் கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் திறந்துள்ளது.

  + மேலும் படிக்க
 • 06ராக் கார்டன்

  1-வது செக்டாரில் சுக்னா ஏரி மற்றும் கேபிடோல் காம்ப்ளக்ஸுக்கு நடுவே இந்த ராக் கார்டன் அமைந்துள்ளது. சண்டிகர் நகரத்தில் உள்ள மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சம் என்றும் இதனை சொல்லலாம்.

  நேக் சந்த் என்பவரால் 40 வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கலைப்பூங்காவில் நகர்ப்புற மற்றும் தொழிற்சாலை கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

  இந்த பாறைத்தோட்ட  பூங்காவில் 14 அறைகள், நீரூற்றுகள், தடாகங்கள், நடைபாதைகள் போன்றவை அழகியல் அம்சங்களோடு காட்சியளிக்கின்றன.

  40 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த பூங்கா வளாகம் தனித்தன்மையான கலைச்சிற்ப அமைப்புகளால் நிரம்பியுள்ளது. உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் சில்லுகள், மின் கம்பிகள், பழைய வாகன உதிரிப்பாகங்கள், பழை மின்விளக்குகள் மற்றும் சாதாரணப்பொருட்களான கட்டிடக்கழிவுகள், முள் கரண்டிகள், களிமண் குண்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் பல்வேறு நிர்மாணச்சிற்ப அமைப்புகளை இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.

  மனித உருவங்கள், கட்டிடங்கள், மிருக உருவங்கள் போன்ற பல்வேறு தோற்றங்களில் இந்த கலைப்படைப்புகள் காட்சியளிக்கின்றன. தினமும் காலை 9 மணிக்கு இந்த பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 07தி ஹிட்டன் வேலி

  தி ஹிட்டன் வேலி

  ‘ஒளிந்து கிடக்கும் பள்ளத்தாக்கு’ என்ற பொருளை தரும் ‘ஹிட்டன் வேலி’ என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த பள்ளத்தாக்குப்பிரதேசம் சண்டிகர் நகரத்துக்கு வடமேற்காக 8 கி.மீ தூரத்தில்  சிவாலிக் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

  புகழ் பெற்ற மாதா ஜயந்தி தேவி கோயிலுக்கு அருகில் இந்த பள்ளத்தாக்குப்பிரதேசம் காணப்படுகிறது. சாகச பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உல்லாசம் போன்றவற்றிற்கு ஏற்ற இயற்கைச்சுற்றுலா ஸ்தலமாக இது அமைந்துள்ளது.

  தூய்மை கெடாத இயற்கைச்சூழலின் நடுவே கயிற்றுக்குதிப்பு, மலை சைக்கிள் சவாரி மற்றும் கயிறு ஏற்றம் போன்ற சாகச பொழுதுபோக்கு அம்சங்களில் இங்கு சுற்றுலாப்பயணிகள் ஈடுபடலாம்.

  மேலும் கூடார வாசம், குடில் வாசம் போன்றவற்றிற்கான வசதிகளும் இந்த ஸ்தலத்தில் கிடைக்கின்றன. ஒட்டகம் அல்லது குதிரைச்சவாரி மூலம் இந்த பகுதியின் இயற்கை எழிலை பயணிகள் முழுமையாக ரசிக்கலாம்.

  இவை தவிர இயந்திர சவாரி அமைப்புகள், சறுக்கு அமைப்புகள், ஊஞ்சல்கள் போன்ற அம்சங்களும் இங்கு பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

  + மேலும் படிக்க
 • 08சுக்னா காட்டுயிர் சரணாலயம்

  சுக்னா காட்டுயிர் சரணாலயம்

  சண்டிகர் நகரத்தை ஒட்டியுள்ள சுக்னா எரியின் வடகிழக்கு பகுதியில் இந்த சுக்னா காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. சுக்னா ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான இது சண்டிகர் நகரத்தை வடிவமைத்த  லெ கொர்புசியர் என்பவரால் 1958-ம் ஆண்டில் முதலில் கண்டறியப்பட்டது. 

  பின்னர் 1998-ம் ஆண்டில்தான்  இது காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.  2600 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயத்தில் பலவகையான பாலூட்டி விலங்குகள், பூச்சியினங்கள் மற்றும் ஊர்வன வகைகள் வசிக்கின்றன.

  இந்தியாவிலேயே சாம்பார் மான்கள் கூட்டம் கூட்டமாக அதிக எண்ணிக்கையில் வசிப்பது இந்த சரணாலயத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இவைதவிர இந்த சரணாலயத்தில் 150 வகையான பறவையினங்களும் வசிக்கின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையான காலத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் பறவைகள் இந்த சரணாலயத்திற்கு விஜயம் செய்கின்றன.

  அழகிய மலர்த்தாவரங்கள், மூலிகைத்செடிகள், புல் வகைகள், கொடிகள் மற்றும் பசுமை மாறா மரங்கள் போன்ற பல்வேறு தாவர வகைகளும் இங்கு நிரம்பியுள்ளன.

  + மேலும் படிக்க
 • 09இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம்

  இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம்

  சண்டிகர் நகரத்தின் 23 வது செக்டாரில் பால பவன் வளாகத்தில் இந்த இண்டர்நேஷனல் டால்ஸ் மியூசியம் எனும் சர்வதேச பொம்மைகள் காட்சியகம் அமைந்துள்ளது. சண்டிகரிலுள்ள இந்திய குழந்தைகள் நலவாழ்வு மன்றம் இந்த காட்சியகத்தை நிர்வகித்து வருகிறது.

  1985ம் ஆண்டில் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மையத்தில் பலவிதமான பொம்மைகள் மற்றும் தோல்பாவைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

  உலகிலுள்ள 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த பொம்மைகள் இங்கு சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனி, ஸ்பெயின், கொரியா, டென்மார்க், நெதர்லாண்ட்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளைச்சேர்ந்த பொம்மைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

  பாரம்பரிய இந்திய அம்சங்கள் மற்றும் உடைகளோடு காணப்படும் இந்திய பொம்மைகளுக்கென்று ஒரு தனிப்பிரிவும் உள்ளது. குழந்தைகளுக்கு பரவசமூட்டும் வகையில் அருங்காட்சியகத்தின் உள்ளேயே வெவ்வேறு பிரிவுகளை இணைக்கும் உல்லாச ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.  

  + மேலும் படிக்க
 • 10கேபிடோல் காம்ப்ளக்ஸ்

  கேபிடோல் காம்ப்ளக்ஸ்

  செக்டார் 1ல் இடம்பெற்றுள்ள இந்த கேபிடோல் காம்ப்ளக்ஸ் ஒரு பிரம்மாண்டமான வளாகமாகும். இதன் உள்ளே பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் ஆட்சிப்பீடங்கள் இயங்குகின்றன.

  திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமான சண்டிகர் நகரத்தின் பிரதான அடையாளமாக இந்த வளாகம் கம்பீரமாக வீற்றிருக்கிறது. இப்படி ஒரு ஒருங்கிணைந்த வளாக அமைப்பிற்கான பெருமை முழுதும் சண்டிகர் நகரத்தை வடிவமைத்த  லெ கொர்புசியர் அவர்களையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  தலைமைச்செயலகம், சட்டப்பேரவை மற்றும் உயர்நீதிமன்றம் ஆகிய மூன்று முக்கியமான அரசாங்க அமைப்புகள் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.

  இந்த மூன்று அமைப்புகளுக்குள் நுழைந்து பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை என்பதால், கைச்சின்னம் அமைந்துள்ள இடத்திலிருந்து இந்த அரசாங்க மாளிகை வளாகங்களை பார்த்து ரசிக்கலாம்.

  உள் நுழைந்து பார்க்க வேண்டுமெனில் சுற்றுலா அலுவலகம் அல்லது உரிய அதிகாரிகளிடம் விசேட அனுமதி பெற்று செல்லலாம். 9 வது செக்டாரில் உள்ள டூரிஸ்ட் பீரோ அல்லது 17 வது செக்டாரில் உள்ள டூரிஸ்ட் சென்டர் போன்ற இடங்களில் இதற்கான விதிமுறைகளுக்கேற்ப அனுமதி பெறலாம்.

  + மேலும் படிக்க
 • 11கன்சால்

  கன்சால்

  கன்சால் எனும் இந்த சிறிய கிராமம் சண்டிகர் நகரத்தில் எல்லையில் அமைந்துள்ளது. சண்டிகர் யூனியன் நிர்வாக இந்த பகுதியை பஞ்சாப் மாநிலத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது.

  இந்த கிராமத்திற்கு அருகில் கன்சால் வனப்பகுதி எனும் இயற்கைக்கானகம் அமைந்துள்ளது. இதில் கழுதைப்புலி, கலைமான், நில்கை மான், நரி மற்றும் முயல் போன்ற விலங்குகள் வசிக்கின்றன.

  இந்த வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி இல்லை என்றாலும் தீவிர இயற்கை ரசிகர்கள் சண்டிகர் வனப்பாதுகாப்பு அதிகாரியிடன் விசேஷ அனுமதி பெற்று காட்டுச்சுற்றுலா மேற்கொள்ளலாம்.

  இந்த வனப்பகுதிக்கு ஒரு விருந்தினர் இல்லமும் அமைந்துள்ளது. இதனைச்சுற்றி ரம்மியமான புல்வெளிகள் மற்றும் பல்வகை மலர்த்தாவரங்கள் போன்றவை காட்சியளிக்கின்றன.

  + மேலும் படிக்க
 • 12குருத்வாரா கூனி சாஹிப்

  குருத்வாரா கூனி சாஹிப்

  குருத்வாரா கூனி சாஹிப் எனும் இந்த வழிபாட்டுத்தலம் குரு கோவிந்த் சிங் தனது படை வீரர்களுடன் ஒரு வார காலம் ஓய்வெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது. முற்காலத்தில் இது பாகீச்சா சாஹிப் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

  தேராதூன் நகரத்திலிருந்து இடம் பெயர்ந்து தன் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்த மாதா ராஜ் கௌர் என்பவரை தரிசிப்பதற்காக இந்த இடத்திற்கு குரு கோவிந்த் சிங் விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது.

  சண்டிகர் – மானசா தேவி சாலையில் இந்த குருத்வாரா அமைந்துள்ளது. அவ்வளவாக பிரபல்யமடையாவிட்டாலும் இந்த குருத்வாரா விஜயம் செய்ய வேண்டிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக விளங்குகிறது.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Feb,Mon
Return On
20 Feb,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
19 Feb,Mon
Check Out
20 Feb,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
19 Feb,Mon
Return On
20 Feb,Tue