Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சண்டிகர் » வானிலை

சண்டிகர் வானிலை

உப வெப்பமண்ட ஈரப்பத பருவநிலையை கொண்டுள்ள சண்டிகர் நகரம் தகிக்கும் கோடைக்காலம், திடீர் மழைப்பொழிவு மற்றும் மிதமான குளிர்காலம் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. வெளிப்புற சுற்றுலா போன்றவற்றுக்கு கோடைக்காலம் ஏற்றதாக இல்லை. அதே சமயம் மழைக்காலத்தில் சிறு விஜயம் மேற்கொள்வதில் இடைஞ்சல் இருக்காது. பொதுவாக செப்டம்பர் முதல் மார்ச் வரையான பருவம் இதமான குளுமையுடன் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

மார்ச் மாத மத்தியில் துவங்கும் கோடைக்காலம் ஜுன் வரை நீடிக்கிறது. சண்டிகர் நகரம் கோடைக்காலத்தில் 35°C  முதல் 42°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. மே மாதம் வரையில் கூட நீடிக்கும் கோடைக்காலத்தில் பயணிகள் சண்டிகருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்க்கின்றனர். சில சமயம் கோடையில் 45°C  வரையில்கூட வெப்பநிலை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. கோடைக்காலத்தின் பொசுக்கும் உஷ்ணத்தை மழைக்காலத்தின் வரவு வெகுவாக தணிக்கும் வகையில் உள்ளது. மிதமான மற்றும் பலமான மழைப்பொழிவை சண்டிகர் இக்காலத்தில் பெறுகிறது. ஈரப்பதம் மற்றும் இறுக்கமான சூழல் ஆகியவற்றை கொண்டிருக்கும் மழைக்காலத்தின் இறுதியில் செப்டம்பர் பாதி துவங்கி நவம்பர் வரையில் காணப்படும் இலையுதிர் காலத்தில் இனிமையான சூழல் நிலவுகிறது. 

குளிர்காலம்

நவம்பர் மாத பாதியில் துவங்கி மார்ச் இறுதி வரை குளிர்காலம் நீடிக்கிறது. 7°C  தொடங்கி  20°C  வரை இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவுகிறது.  குறைந்தபட்ச வெப்பநிலையாக -2°C  முதல்  5°C  வரை காணப்படும். பொதுவாக சண்டிகர் நகரம் இதமான குளிரைக்கொண்டிருந்தாலும் பனி மற்றும் சிலசமயங்களில் பனிக்கட்டி தூறல் போன்ற அம்சங்களால் கடுங்குளிரைக்கொண்டதாக காட்சியளிக்கிறது.