கௌலெஸ்ஹ்வரி தேவி கோவில் சத்ராவில் உள்ல கொல்ஹு மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். மேலும் இந்தக் கோவில் இந்துக்கள், புத்த மதத்தினர் மற்றும் சமணர்கள் போன்ற அனைத்து மதத்தவர்களுக்கும் ஒரு பிரபலமான யாத்திரை ஸ்தலமாக விளங்குகின்றது.
இந்தக் கோவிலில் குடி கொண்டுள்ள கௌலெஸ்ஹ்வரி தேவி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோய் சமூகத்தவர்களால் வணங்கப்படுகிறாள். இந்த இடம் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவிலை அடைய மலையை ஏறிச் செல்ல வேண்டும். அதுவே பக்தர்களுக்கு ஒரு இனிய ட்ரெக்கிங் அனுபவத்தை தருகின்றது. இங்கு வசந்த் பஞ்சமி மற்றும் ராம்நவமியின் போது கொல்ஹு மேளா கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications