சென்னையில் கிண்டி கோட்டூர்புரம் பகுதியிலுள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் இந்த பிர்லா கோளரங்கம் அமைந்துள்ளது. 1988ம் ஆண்டில் இந்த கோளரங்கம் திறக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுடன் சென்னைக்கு விஜயம் செய்யும் பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடம் இந்த பிர்லா கோளரங்கம் ஆகும். இது கல்வி மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் சேர்த்தே வழங்குகிறது.
அண்டவெளி மற்றும் கிரகங்கள் மத்தியில் நாம் இருப்பது போன்ற அற்புற அனுபவத்தை இந்த அரங்கு பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
2009ம் ஆண்டில் 360° காட்சித்திரை வசதி நாட்டிலேயே முதல் முதலாக இந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 21 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வானியல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக இந்த மையத்தில் சில பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. அதற்கான விசேடமான வகுப்பறை அரங்கும் இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. வானியல் துறை தொடர்பான விரிவுரைகளும் அவ்வப்போது இந்த மையத்தில் அறிவியல் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களால் நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications