Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » ஈர்க்கும் இடங்கள் » தேவி கருமாரியம்மன் கோயில் – திருவேற்காடு

தேவி கருமாரியம்மன் கோயில் – திருவேற்காடு, சென்னை

58

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் சென்னையின் மேற்குப்பகுதியில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கிறது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள்(வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும்.

புராதன காலத்தில் இப்பகுதியிலிருந்த வனப்பகுதி மருத்துவ குணம் மிகுந்த மூலிகைத்தாவரங்களை கொண்டிருந்ததாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. இருப்பினும் தற்போது திருவேற்காடு பகுதி தேவி கருமாரியம்மன் கோயிலுக்காக புகழுடன் அறியப்படுகிறது.

தலபுராணக்கதைகளின்படி தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாக திரிந்ததாகவும் அந்த பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்கு குறி சொல்வதற்காக சென்றதாகவும்,  அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7வது நாளை தேவிகருமாரி தினமாக அனுஷ்டிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் ஐதீகக்கதை முடிகிறது.

எனவே இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்பட்டுவருகிறது. அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed