Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சிக்பல்லாபூர் » ஈர்க்கும் இடங்கள் » எம். விஸ்வேரய்யா மியூசியம்

எம். விஸ்வேரய்யா மியூசியம், சிக்பல்லாபூர்

15

நேரம் இருப்பின் சிக்பல்லாபூர் விஜயத்தின் போது பார்க்க வேண்டிய ஒரு அம்சம் இந்த விஸ்வேஸ்ரய்யா மியூசியம் ஆகும். இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களுள் ஒருவரான சர் எம். விஸ்வேஸ்ரய்யாவின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மியூசியத்தில் பலவிதமான நினைவுப்பொருட்களும் காட்சி அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த மியூசியத்தின் ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு அறிவியல் பிரிவுகள் மற்றும் விசேஷ துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோடெக்னிக் காலரி, என்ஜின் ஹால், ஸ்பேஸ் காலரி, ஃபன் சைன்ஸ் என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

இதுதவிர பயோ டெக்னாலஜி ஹால், குழந்தைகளுக்கான அறிவியல் பிரிவு, BEL எலக்ட்ரானிக்ஸ் பிரிவு மற்றும் டைனோசார் பிரிவு போன்றவையும் இந்த மியூசியத்தில் காணப்படுகின்றன. ஒரு விசேஷ அம்சமாக இங்கு ரைட் சகோதரர்கள் துவக்கத்தில் உருவாக்கிய முதல் விமானத்தின் முழுமாதிரி நகல் வடிவம் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பார்வையாளர்கள் தரமண்டல் ஷோ, தி சைன்ஸ் டெமான்ஸ்ட்ரேஷன் ஷோ, வான்வெளி காட்சி ஷோ, நினைவுத்தினக்காட்சி போன்றவற்றில் பங்கேற்பதோடு பல புகழ்பெற்ற அறிவியல் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவுகளிலிருந்து கேட்டு மகிழலாம்.

மேலும் இந்த மியூசியம் மாணவர்களுக்காகவே சதர்ன் இந்திய சைன்ஸ் பேர்(தென்னிந்திய அறிவியல் திருவிழா), சைன்ஸ் டிராம காம்பெட்டிஷன் (அறிவியல் நாடக போட்டி), சைன்ஸ் குவிஸ் போட்டி (அறிவியல் கேள்விப்போட்டி), மாணவர் அறிவியல் கருத்தரங்கம் மற்றும் கிரியேட்டிவ் எபிலிட்டி சென்டர் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இது மட்டுமில்லாமல் பல அறிவியல் கருத்தப்பட்டறைகளும், கண்காட்சிகளும், மாநாடுகளும் இந்த மியூசியத்தில் நடத்தப்படுகின்றன.

பார்வையாளர்கள் ஒரு சாதாரண மியூசியத்தில் பார்க்க முடியாத பல அற்புத படைப்புகளை இந்த எம்.விஸ்வேஸ்வரய்யா மியூசியத்தில் கண்டு மகிழலாம். அவற்றில் ரியாக்‌ஷன் டர்பைன், எச்.எஃப் ஏர்கிராப்ஃட், நீராவி யந்திரம், வட்ட வடிவ கணிப்பான் மற்றும் எடிசனின் போனோகிராஃப் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இவை தவிர ஒரு யந்திர கணினி, கிராமபோன், எண் பூட்டு, தையல் இயந்திரம் போன்றவற்றின் ஆரம்ப கால கண்டுபிடிப்புகளின் அசல் மாதிரிகளை காணலாம். அறிவியல் ஆர்வலர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றதாக இந்த மியூசியம் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue