சித்தோர்கர் தொல்லியல்துறை அருங்காட்சியகம் பன்பீர்-கி-தீவார் எனும் இடத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா அம்சமாகும். வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயம் இந்த அருங்காட்சியகத்தை விரும்புவார்கள்.
இங்கு பல அபூர்வமான வரலாற்று கால கைவினை கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் மௌரியர் அல்லது குப்தர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
பௌத்த மற்றும் ஹிந்து பாரம்பரிங்களின் பல்வேறு சிறப்பம்சங்களை இந்த சேகரிப்புகள் பிரதிபலிக்கின்றன. இவை தவிர அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட பல அபூர்வ பொருட்களையும் இந்த அருங்காட்சியக கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications