Search
 • Follow NativePlanet
Share

மௌண்ட் அபு – ஆச்சரியங்கள் காத்திருக்கும் மலைவாசஸ்தலம்

40

ராஜஸ்தான் மாநிலத்தின் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள மௌண்ட் அபு ஒரு பிரசித்தமான மலைவாசஸ்தலம் எனும் புகழை பெற்றுள்ளது. இயற்கை எழிலுடன் கூடிய இனிமையான சீதோஷ்ணநிலை, பசுமையான மலைகள், சாந்தம் தவழும் ஏரிகள், கலையம்சம் கொண்ட கோயில்கள் மற்றும் பல ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்கள் போன்றவை இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன. 1200 மீட்டர் உயரத்தில் ஆரவல்லி மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தில் இந்த மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது.

மௌண்ட் அபு மலைவாசஸ்தலம் தனது செழுமையான வரலாற்றுப்பின்னணி காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய சுற்றுலா மையமாக திகழ்கிறது. புராதன தொல்லியல் ஸ்தலங்கள் மற்றும் அற்புதமான பருவநிலை போன்றவை இந்த ஸ்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இத்தலத்திற்கு குறிப்பாக கோடைக்காலம் மற்றும் மழைக்காலத்தில் விஜயம் செய்கின்றனர்.கடந்த பத்தாண்டுகளில் இந்த மலைவாசஸ்தலம் புதுமணத்தம்பதிகளுக்கு மிகவும் பிடித்த தேனிலவு ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

புராணிகப்பின்னணி

மௌண்ட் அபு மலைவாசஸ்தலமானது ஆதியில் ‘அற்புதாரண்யா’ எனும் பெயரினால் அழைக்கப்பட்டுள்ளது. அதாவது அற்புதா எனும் தெய்விகப்பாம்பு வசித்த வனப்பகுதி என்பது அதன் பொருளாகும்.

சிவனின் வாகனமான எருதைக் காக்க வேண்டி இந்த பாம்பு அவதரித்ததாக ஆன்மீக நம்பிக்கைகள் நிலவுகின்றன. காலப்போக்கில் ‘அற்புதாரண்யா’ எனும் பெயர் திரிந்து அபு பர்வதம் என்று மாறி இறுதியாக மௌண்ட் அபு என்று நிலை பெற்றுள்ளது.

குஜ்ஜார்கள் எனப்படும் பாரம்பரிய இனத்தார் இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அற்புதா மலைப்பிரதேசத்தில் குஜ்ஜார் இனத்தாரின் நீண்ட வரலாற்றுப்பின்னணி குறித்த தகவல்கள் இங்கு கிடைத்துள்ள பல குறிப்புகள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

மௌண்ட் அபு ஸ்தலத்தின் விசேஷங்கள்

நக்கி ஏரி, சன்செட் பாயிண்ட், டோட் ராக், சிட்டி ஆஃப் அபு ரோட், குரு ஷிகார் பீக் மற்றும் மௌண்ட் அபு சரணாலயம் போன்றவை மௌண்ட் அபு ஸ்தலத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

மேலும், பல வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களையும் இது பெற்றுள்ளது. தில்வாரா ஜெயின் கோயில், ஆதார்தேவி கோயில், தூத் பாவ்ரி, ஸ்ரீ ரகுநாத்ஜி கோயில் மற்றும் ஆச்சால்கர் கோட்டை போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

மௌண்ட் அபு நகருக்கான பிரயாண வசதிகள்

விமானம், ரயில் மற்றும் சாலைவழி போன்ற போக்குவரத்து வசதிகளால் மௌண்ட் அபு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மௌண்ட் அபு நகரத்துக்கு அருகில் 176 கி.மீ தூரத்தில் உதய்பூர் விமான நிலையம் அமைந்துள்ளது. வருடமுழுவதுமே இம்மலை நகரத்தில் இனிமையான பருவநிலை நிலவினாலும் கோடைக்காலத்தில் இங்கு சுற்றுலா மெற்கொள்வது சிறந்தது.

மௌண்ட் அபு சிறப்பு

மௌண்ட் அபு வானிலை

சிறந்த காலநிலை மௌண்ட் அபு

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது மௌண்ட் அபு

 • சாலை வழியாக
  மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்துக்கு சுற்றுலாப்பயணிகள் சௌகரியமான பேருந்து சேவைகள் மற்றும் டாக்சிகள் மூலமாக பயணம் மேற்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் டெல்லி, ஜெய்பூர், உதய்பூர் மற்றும் அஹமதாபாத் போன்ற நகரங்களிலிருந்து மௌண்ட் அபுவுக்கு இயக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகளின் வரவைப்பொறுத்து இந்த சேவைகள் தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் அமைகின்றன. பேருந்து வசதிகளைப்பொறுத்து கட்டணங்கள் அமைந்துள்ளன.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  மௌண்ட் அபு மலைவாசஸ்தலத்திலிருந்து 27 கி.மீ தூரத்தில் அபு ரோடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை பெருநகரங்களை இணைக்கும் பிரதான ரயில் பாதை இந்த ரயில் நிலையம் வழியே செல்கிறது. இது தவிர பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்பூர், டெஹ்ராடூன் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கும் இங்கிருந்து ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  மௌண்ட் அபு நகரத்திலிருந்து 176 கி.மீ தூரத்தில் உதய்பூர் உள்நாட்டு விமான நிலையம் உள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் எளிதாக இந்த மலைவாசஸ்தலத்துக்கு வருகை தரலாம். அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, சென்னை,பெங்களூரு மற்றும் மும்பை போன்ற முக்கிய இந்திய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகள் உள்ளன. அஹமதாபாத் நகரத்திலிருந்து 221 கி.மீ தொலைவில் உள்ள மௌண்ட் அபுவிற்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Dec,Thu
Return On
10 Dec,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
09 Dec,Thu
Check Out
10 Dec,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
09 Dec,Thu
Return On
10 Dec,Fri