Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » ஈர்க்கும் இடங்கள் » தில்வாரா ஜெயின் கோயில்கள்

தில்வாரா ஜெயின் கோயில்கள், மௌண்ட் அபு

40

தில்வாரா ஜெயின் கோயில்கள் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்தக் கோயில்கள் 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளன. மௌண்ட் அபு நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக கருதப்படும் இக்கோயில்கள் வெள்ளைப்பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ளன.

ஐந்து அழகான ஜெயின் கோயில்களை உள்ளடக்கிய இக்கோயில்கள் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெயின் கோயில்களில் மிகவும் அழகு பொருந்தியவையாக கருதப்படுகின்றன.

ஒவ்வொரு கோயிலும் மற்றொன்றைப் போல் அல்லாமல் தனித்தன்மையான கலையம்சத்துடன் கட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஊர்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விமால் வஸாஹி கோயில், லுனா வசாஹி கோயில், பீதல்ஹார் கோயில், கர்த்தார் வஸாஹி கோயில் மற்றும் ஷீ மஹாவீர் ஸ்வாமி கோயில் என்பவை இவற்றின் பெயர்களாகும்.

ஏராளமான ஜெயின் சமூக பக்தர்கள் இக்கோயில்களில் வீற்றிருக்கும் தீர்த்தங்கரர்களை தரிசிக்க வருகை தருகின்றனர். இக்கோயில்களின் விரிவான வரலாறு மற்றும் இதர தகவல்களை அறிந்துகொள்ள பயணிகள் உள்ளூர் வழிகாட்டிகளின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மௌண்ட் அபு நகர மையத்திலிருந்து இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்களுக்கு செல்ல தனிச்சாலை வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Aug,Sat
Check Out
02 Aug,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Aug,Sat
Return On
02 Aug,Sun