Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மௌண்ட் அபு » வானிலை

மௌண்ட் அபு வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Mount Abu, India 28 ℃ Sunny
காற்று: 9 from the WSW ஈரப்பதம்: 48% அழுத்தம்: 1011 mb மேகமூட்டம்: 0%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 06 May 25 ℃ 76 ℉ 40 ℃104 ℉
Tuesday 07 May 25 ℃ 77 ℉ 39 ℃102 ℉
Wednesday 08 May 25 ℃ 76 ℉ 38 ℃100 ℉
Thursday 09 May 24 ℃ 74 ℉ 37 ℃99 ℉
Friday 10 May 23 ℃ 73 ℉ 37 ℃98 ℉

வருடமுழுவதுமே குளுமையான இனிமையான பருவநிலையைக் கொண்டுள்ளதால் மௌண்ட் அபு நகரத்துக்கு எப்போது வேண்டுமானாலும் விஜயம் செய்யலாம். இருப்பினும் கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. கடுமையான இந்திய கோடையிலிருந்து தப்பிப்பதற்காக பயணிகள் அதிக அளவில் மௌண்ட் அபு மலை வாசஸ்தலத்துக்கு விரும்பி வருகின்றனர்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): மௌண்ட் அபு பகுதியில் கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாகக் காணப்பட்டாலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிடும் போது மிக குறைவான வெப்பநிலையுடன் 36° C க்கு எப்போதும் மிகாமல் காணப்படுகிறது. மேலும், சராசரியாக இக்காலத்தில் வெப்பநிலை 19° C முதல் 21° C வரை நிலவுகிறது. கோடைக்காலத்தில் மௌண்ட் அபுவுக்கு விஜயம் செய்யும் பயணிகள் தளர்வான மெல்லிய பருத்தி உடைகளுடன் செல்வது நல்லது.

மழைக்காலம்

(ஜுலை முதல் செப்டம்பர் வரை): பாலைவனத்தின் நடுவே அமைந்திருந்தாலும் மௌண்ட் அபு பிரதேசம் மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. இக்காலத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 25° C ஆகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலையாக 18° C யும் நிலவுகிறது. மாதத்தில் 55செ.மீ முதல் 60 செ.மீ வரையிலான மழைப்பொழிவை இக்காலத்தில் மௌண்ட் அபு பெறுகிறது.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை): நவம்பர் முதல் பிப்ரவரி வரை மௌண்ட் அபு பகுதியில் குளிர்காலம் நிலவுகிறது. கடுமையான குளிர் நிலவும் இக்காலத்தில் வெப்பநிலை 12° C முதல் 29° C வரை நிலவுகிறது. இரவு நேரத்தில் 0° C க்கும் கீழே வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதால் உறைய வைக்கும் கடுங்குளிரை இங்கு சந்திக்க நேரிடலாம்.