சித்தோர்கர் – புண்டி சாலையில் சித்தோர்கர் நகரத்திலிருந்து 90கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிறு கிராமம் இந்த மேணல் ஆகும். பிரபலமான கஜுராஹோ வரலாற்றுத்தலம் போன்றே அழகிய இயற்கைச்சூழலையும் அற்புதமான புராதனக்கோயில்களையும் கொண்டுள்ளதால் இது ‘சின்ன கஜுராஹோ’ என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஏற்கனவே பல புராதனமான பௌத்த கோயில்களைக் கொண்டுள்ள இந்த ஸ்தலத்தில் புதிது புதிதாக இன்னும் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கோயில்கள் தவிர அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்று அடர்ந்த வனப்பகுதி ஆகியன இந்த ஸ்தலத்தை ஒரு பிரசித்தமான சிற்றுலாப்பகுதியாகவும் மாற்றியுள்ளன.



Click it and Unblock the Notifications