Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» சுங்க்தாங்க்

சுங்க்தாங்க் - புனித பள்ளத்தாக்கு!

9

`சுங்க்தாங்க்', வட சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். ` யும்தாங்க்', செல்லும் வழியில் உள்ள சுங்க்தாங்க் பள்ளத்தாக்கு, `லாசுங்க் சு', மற்றும் `லாசின் சு' ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. சிக்கிமில் உள்ள  புனிதமான இந்த சிறிய நகரம்,  மிகப் பிரபலமான புத்த மத துறவியான `பத்மசம்பவ' ரால் ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. சுங்க்தாங்க் பன்முகத்தன்மை உடைய பல்வேறு உயிரினங்களை தன்னக்த்தே கொண்டுள்ளது. இங்கு பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பரவலாக காணப்படுகின்றன.

வரலாறு

சிக்கிமில் உள்ள சுங்க்தாங்க்கிற்கு ஒரு சுவாரசியமான வரலாறு உண்டு. குரு பத்மசம்பவரால் ஆசீர்வதிக்ககப்பட்ட இந்நகரம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் வரலாற்றுடன் பல்வேறு நம்பிக்கைகள்  மற்றும் புனைவுகள்  பிணைந்துள்ளன.

இங்கு வழங்கும் ஒரு கதையின் படி, புகழ்பெற்ற புத்த துறவி குரு பத்மசம்பவர், சுங்க்தாங்க்கிற்கு வருகை தரும் பொழுது, இங்குள்ள ஒரு பாறையின் மீது ஓய்வெடுத்தார்.

அப்பொழுது அவரின் காலடித்தடம் அப்பாறையின் மீது பதிந்தது. அந்த காலடித்தடத்தை நாம் இப்பொழுதும் காணலாம்.  மேலும், அப்பாறையிலுள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியே இப்பொழுதும் தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.

ஆச்சர்யபடத்தக்க வகையில்  இங்கு  நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த சீதோஷ்ண நிலையில் நெல் விளைவது மிகவும் அதிசயமாகும்.

அப்பொழுது அவர் இந்த இடத்திற்கு `சுங்கா ஸ்தான்'  என பெயர் சூட்டியதாக நம்பப்படுகிறது. சுங்கா ஸ்தான் என்பது ஒரு பஞ்சாபி வார்த்தையாகும். இதற்கு `ஒரு நல்ல இடம்' என்று பொருள். சுங்கா ஸ்தான் என்கிற வார்த்தை மருவி, சுங்க்தாங்க் என அழைக்கப்படுகிறது.

நிலவியல்

சுங்க்தாங்க், சிக்கிம் தலைநகர், காங்டாக்கில்  இருந்து 95 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1790 மீட்டர் உயரத்தில் உள்ள இந்நகரம் 27,62 ° N மற்றும்  88,63 ° E என்கிற கோணத்தில் அமைந்துள்ளது.

சுங்க்தாங்க் சிறப்பு

சுங்க்தாங்க் வானிலை

சிறந்த காலநிலை சுங்க்தாங்க்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சுங்க்தாங்க்

  • சாலை வழியாக
    மாங்கன் சுங்க்தாங்க்கிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து பேருந்துகள் மற்றும் டாக்சிகள் மூலம் சுங்க்தாங்கை எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    `நியூ ஜல்பைகுரி' ரயில் நிலையம் சுங்க்தாங்க்கிற்கு அருகில் உள்ளது. இந்த ரயில் நிலையம் சிக்கிமில் உள்ள பிற இடங்களுக்கு செல்வதற்கும் உதவுகிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சுங்க்தாங்க்கிற்கு அருகில் `பக்டோக்ரா' விமான நிலையம், 121 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 May,Sun
Check Out
01 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 May,Sun
Return On
01 Jun,Mon