'புனித பாறை ' சுங்க்தாங்க்கில் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான இடம் ஆகும். இந்த பாறை, குரு பத்மசம்பவருடன் தொடர்புடையது. அவர் இங்கு தங்கி ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.
அவருடைய பாதம் பதிந்துள்ள இந்த பாறையை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். மேலும், இப்பாறையிலுள்ள ஒரு சிறிய துவாரத்தின் வழியே இப்பொழுதும் தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது.
இதனை விடவும் அதிசயமாக, தண்ணீர் விழும் இடத்தை சுற்றி நெல் விளைகிறது. இந்த சீதோஷ்ண நிலையில் நெல் விளைவது மிகவும் அதிசயமாகும். இது குரு பத்மசம்பவாவினுடைய ஆசிர்வாதம் என நம்ம்பப்படுகிறது.
அவர் இங்கு ஓய்வெடுக்கும் பொழுது, இந்த இடத்தை சுற்றி நெல் மணிகளை தூவினார் என்றும் அதன் பிறகே இந்த இடத்தில் நெல் விளைவது சாத்தியமாயிற்று எனவும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications