குழந்தை வேலாயுத சுவாமி கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குருந்தமலை என்ற சிறிய கிராமத்தில் உள்ளது.இந்தக் கோயில் கோயம்புத்தூரிலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் காரமடையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்தக் கோயில் குழந்தை வேலாயுத சாமியாக வணங்கப்படும் முருகப் பெருமானுக்குரியது. இங்குள்ள தெய்வ விக்கிரகம் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ள கர்ப்பக் கிரகத்தினுள் வைக்கப் பட்டுள்ளது.
இந்தக்கோயில் ஒரு சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. குன்றின் அடிவாரத்தில் விநாயகருக்கான கோயில் ஒன்று உள்ளது. இங்கு விநாயகப் பெருமான் வழிபடப்படுகிறார்.
எழுநூறு வருடங்கள் பழமையான இந்தக் கோயில் இங்குள்ள மிக அழகான கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. புராணப்படி அகத்திய முனிவர் இந்தக்கோயிலில் முருகக்கடவுளிடம் இருந்து மந்திர உபதேசம் பெற்றதாக கூறப்படுவதால் இந்தக் கோயில் முருக பக்தர்களிடையில் புகழ்பெற்று விளங்குகிறது.



Click it and Unblock the Notifications