மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு பயணப் பிரியர்களின் வரைபடத்திலேயே காணப் படாத ஒரு இடமாகும். இங்கு வர நீங்கள் பசுமையான காடுகளிடையே மலைப்பயணம் செய்ய வேண்டும்.
இந்தப் பள்ளதாக்குக்கு செல்லும் மலைப்பயணமே சாகசங்கள் நிறைந்ததாக செல்பவர்களை வாய்பிளக்கச் செய்கிறது. குன்னூரின் மலைகளால் சூழப்பட்டிருக்கும் இந்த பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் பயணிகளை ஈர்க்கிறது.
பிரதான சாலை என்று ஏதும் இல்லாத காரணத்தால் இங்கு வர பயணிகள் மலைப்பாதையில் ட்ரெக்கிங் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் காட்சியைக் காண உயிரையும் கொடுக்கலாம் என்று சொல்ல வைக்கும் வகையில் இந்த மலைகளின் அற்புத காட்சிகளை இங்கிருந்து காணலாம்.
அழகிய மலைகள், பசுமையான சமவெளிகள் என இந்தக் காட்சிகள் பார்வையாளர்களின் மனதில் இந்த மலைப்பகுதியின் தோற்றத்தைப் பதிவு செய்கின்றன. வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள இவ்விடம் மலைப்பயண விரும்பிகள், இயற்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் இடம்.



Click it and Unblock the Notifications