பான்சி கோபால் கோவில் மத்திய காலத்தைச் சேர்ந்த சிக்காரா கட்டிடக்கலையை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இடமாகும். இந்த கோவில் இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் அவருடைய அன்பிற்குரிய மனைவி ராதா ஆகியோரை வணங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1595-ம் ஆண்டைச் சேர்ந்த பால்பத்ர மன்னரின் தாமிர பட்டைய பதிவுகளில், இந்த கோவிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்து மதத்தின் நம்பிக்கைகளில் காணப்படும் உருவங்களைக் கொண்டு இந்த கோவிலின் நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் எல்லையில், கஜீராகோ போன்ற மனதை மயக்கும் சுற்று வட்ட காட்சியை பார்வையாளர்களால் காண முடியும்.
மேற்கண்ட தெய்வங்கள் மட்டுமல்லாமல் பிற இந்து கடவுள்களான ஹரி-ஹரர், சூரியன், விஷ்ணு மற்றும் உமா மகேஷ்வரர் ஆகியோரது சிலைகளையும் இந்த கோவிலில் காண முடியும்.



Click it and Unblock the Notifications