டல்ஹெளசியின் மிக உயர்ந்த சிகரமான டாய்ன்குன்ட் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 2755மீ அமைந்திருக்கிறது. நகரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் அதன் இயற்கையழகிற்காக மிகவும் பெருமை பெற்ற இடமாகும்.
இந்த சிகரத்தின் உச்சியிலிருந்து கிடைக்கும் 360டிகிரி காட்சி காண்பவரின் கண்களை பிரமிக்கச் செய்வதாக இருக்கும். இந்த சிகரத்தில் நின்று கொண்டிருக்கும் போது எழும் மெல்லிய காற்றின் ஓசை உங்களுக்கு இந்த மலை பாடுவதைப் போன்ற தோற்றத்தை காட்டும். அதனாலேயே இந்த மலை 'பாடும் மலை' என்றும் அழைக்கப்படுகிறது.
விமான படைத்தளமாக இருக்கும் இந்த சிகரத்தில் இருக்கும், போலானி தேவி கோவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த கோவிலில் சூலாயுதம் மட்டுமே இருக்கும் என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும் மற்றுமொரு தகவலாக இருக்கும்.
சாகச விரும்பிகள் மலையேற்றம் செல்வதன் மூலம் இந்த பள்ளத்தாக்கின் குறுக்காக பாய்ந்தோடும் நதிப்படுகைகளின் அழகை பருகிச் செல்ல முடியும். காலாடாப் வனவிலங்கு சரணாலயம் மற்றும் காந்தி சௌக் ஆகியவை இதற்கு அருகிலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் ஆகும்.



Click it and Unblock the Notifications