கைய்ந்த் வாலி கோதி, டாபோ பூமி, பரம்தாம் மற்றும் ராம் ஆஷ்ரம் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் நார்வுட் பரம்தாம் டல்ஹெளசி நகரத்தின் பக்ரோதா மலையில் அமைந்துள்ளது.
குருவானவர் இந்த வீட்டில் தங்கியிருந்து மதம், சமூகம் மற்றும் கலாச்சாரம் பற்றி கற்றுத் தந்ததாக நம்பப்படுகிறது. 1925-ம் ஆண்டு சுவாமி சத்யானந்தர் டல்ஹெளசிக்கு பயணப்பட்டு, ஞானோதயம் பெறுவதற்காக சுமார் ஒரு மாதம் தியானமும் மற்றும் உண்ணாவிரதமும் இருந்தார். அவர் இங்கு தங்கியிருந்த காலங்களில் மத சம்மந்தமான பல்வேறு நூல்களை எழுதினார்.
சுவாமி சத்யானந்தர் தனது கடைசி மூச்சினை 1960-ல் இந்த இடத்தில் விட்ட பின் இவ்விடம் பரம் தாம் என்று அழைக்கப்பட துவங்கியது. இன்று சுவாமி சத்யானந்தரை தொடர்ந்து வந்த பகத் ஹன்ஸ் ராஜ் ஜி-யினால் இவ்விடம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
அவர் தொடர்ச்சியான போதனை வகுப்புகளையும் மற்றும் ஆண்டுக்கு இருமுறை கூட்டங்களையும் கூட்டுவார். இந்த நேரங்களில் நிறைய பக்தர்கள் இவ்விடத்தில் கூடுவார்கள். காந்தி சௌக்கில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் ஒரே சமயத்தில் 250 பேர் தாராளமாக உட்காருவதற்கு ஏற்றது.



Click it and Unblock the Notifications