Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டல்ஹெளசி » ஈர்க்கும் இடங்கள் » செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச்

செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச், டல்ஹெளசி

71

புரோட்டஸ்டன்ட் பிரிவு கிறிஸ்துவ மக்களால் 1903-ம் ஆண்டு பலூனில் கட்டப்பட்டுள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் சர்ச் 'சர்ச் ஆஃப் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த தேவாலயம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னமும் நல்ல நிலைமையில் உள்ளதால் டல்ஹெளசி வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.

இந்த தேவாலயத்தின் நிர்வாகம் இதனை காக்கும் பொருட்டாக மதில் சுவர் ஒன்றையும் ஆலயத்தைச் சுற்றிலும் கட்டியுள்ளது. இதன் நுழைவாயில் கதவு எப்பொழுதும் மூடியே வைக்கப் பட்டிருக்கும், ஆனால் முதன்மையான சுற்றுச் சுவற்றின் வலது முனையில் உள்ள கதவு வழியாக நாம் உள்ளே சென்று வர முடியும்.

ஆங்கிலேயர்களின் கட்டிடக்கலை நுணுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த இடத்தை சுற்றுலாப் பயணிகள் முழுவதுமாக சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது 1 மணி நேரம் பிடிக்கும். செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் டல்ஹெளசியின் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிமீ தொலைவிலேயே உள்ளது எனவே அதனை பேருந்து மூலமாகவே அடையவும் முடியும்.

சாகசத்தை விரும்புபவர்கள் இந்த இடத்தின் கண்கவர் இயற்கையழகை ரசித்துக் கொண்டே மெதுவாக நடந்து சென்று இவ்விடத்தை அடையலாம். இந்த சர்ச்சுக்கு அருகிலிருக்கும் வேறு சில பார்வையிடத் தகுதியான இடங்கள் செயின்ட் ஜான்ஸ் சர்ச், செயின்ட் பாட்ரிக்ஸ் சர்ச் மற்றும் சுபாஷ் பாவ்லி ஆகியவை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
04 Aug,Tue
Return On
05 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
04 Aug,Tue
Check Out
05 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
04 Aug,Tue
Return On
05 Aug,Wed