செயின்ட் ஜான்ஸ் சர்ச், டல்ஹெளசி

பிரிட்டிஷ் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட செயின்ட் ஜான்ஸ் சர்ச், விக்டோரியாவின் காலத்தைச் சேர்ந்த அற்புதமான கட்டிடமாகும். 1863-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த தேவாலயம் டல்ஹெளசி நகரத்தில் உள்ள பழமையான மற்றும் வரலாற்று பெருமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாகும்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் புரோட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தவர்களால் இந்த கட்டிடத்தின் அஸ்திவாரம் உருவாக்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் வாரந்திர கூட்டங்களில் பெரும்பாலான ஜனத்திரள்களாக மக்கள் கலந்து கொள்வார்கள்.

பிரார்த்தனைக்காக வருபவர்கள் தவிர, வரலாற்று ஆர்வலர்கள், தீவிரமாக படிப்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் இந்த தேவாலயத்திற்கு வருவதற்கு ஆர்வமாக இருப்பார்கள்.

செயின்ட் ஜான்ஸ் சர்ச்சில் பல்வேறு தலைப்புகளில் நூல்கள் மற்றும் டல்ஹெளசி நகரத்தின் வரலாறு மற்றும் கலச்சாரம் போன்றவற்றை விளக்கும் சம்பவங்களை காட்டும் அரிய புகைப்படங்களை உடைய ஒரு நூலகமும் உள்ளது.

இந்த தேவாலயம் அழகான சுற்றுச் சூழலில் அமைந்துள்ளதால் இந்த இடத்தின் அழகு மேலும் கூடுதலாக காட்சியளிக்கும். காந்தி சௌக்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் சர்ச்சுக்கு, டல்ஹெளசி பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு நடப்பதன் மூலம் அடைந்து விட முடியும்.

Please Wait while comments are loading...