சுபாஷ் பாவ்லி என்பது டல்ஹெளசியில் இருந்து 1 கிமீ தொலைவில் உள்ள தொடர்ச்சியான நீரூற்றையே குறிக்கிறது. இந்த இடம் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸின் பெயரையே பெற்றிருக்கிறது.
அவர் 1937-ம் ஆண்டு அவருடைய உடல்நிலை சரியில்லாமலிருந்த போது சிகிச்சை எடுப்பதற்காக டல்ஹெளசிக்கு வந்து தங்கியிருந்தார். இந்த சுனையின் மருத்துவ குணமுள்ள தண்ணீர்தான் அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு காரணமாக இருந்தது என்றும் கூறப்படுகிறது.
அழகான வனப்பகுதிகள் மற்றும் புத்துணர்ச்சி தரும் நீர்ச்சுனை ஆகிய இரண்டும் தொலைதூரத்திலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் அம்சங்களாக இருக்கின்றன.
நீர்வீழ்ச்சி ஏரியின் எதிர்பகுதியில் இருந்து பார்க்கும்படி அமைந்திருப்பது இந்த இடத்தின் அழகை கூட்டுகிறது. அதுவும் வனப்பகுதிகளுக்கு நடுவிலுள்ள குகையில் 'பளிச்' என்ற தண்ணீரை இது பெற்றுள்ளது.
மேலிருந்து ஒரு சொட்டு நீர் கூட நம்மேல் படாமல் அந்த குகைக்குள் நடந்து செல்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். அருகிலுள்ள தேநீர் கடையில் நமக்கு தேவையான பானங்களும், நொறுக்குத் தீனிகளும் கிடைக்கும். பனிமண்டலத்தால் மூடப்பட்ட மலை முகடுகள் மற்றும் அற்புதமான சீதோஷ்ண நிலை ஆகியவை பார்ப்பவர் மனதை பரவசப்படுத்துவதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications