தேவ்கா பீச், தமன்

தமன் நகரத்திலுள்ள மற்றுமொரு அழகிய கடற்கரையாக தேவ்கா பீச் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நனி தமன் பகுதியிலிருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.

அமைதியான இந்த கடற்கரையில் அலைகள் கால்களை நனைக்கும்படி நடக்கும் அனுபவம் வித்தியாசமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இங்கு அலை இறக்கம் காணப்படும் நேரங்களில் பயணிகள் ஈர மணலில் நடந்தபடியே சங்குகள் மற்றும் சிப்பிகள் போன்ற கடற்பொருட்களை சேகரிக்கலாம். சாகச மனம் கொண்டவர்கள் நீந்தி குளித்தும் மகிழலாம்.

இருப்பினும் இந்த நீச்சல் பொழுதுபோக்குகளில் தங்கள் பாதுகாப்பு குறித்த சொந்த கவனத்துடன் பயணிகள் ஈடுபடுவது அவசியம். ஏனெனில் நீருக்கு அடியிலுள்ள தரைப்பகுதி கூரான, கரடுமுரடான மண் அமைப்புகளை கொண்டிருக்க வாய்ப்புள்ளது.

கடற்கரைப்பகுதியை மட்டுமே சுற்றி பார்த்து அலுத்துப்போயிருப்பின் இந்த கடற்கரையிலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் பொழுதுபோக்கு பூங்காவிற்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.

கலையம்சத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும் அலங்கார தோட்டங்கள் மற்றும் நீரூற்றுகள் ஆகியவற்றின் மத்தியில் சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பக்கூடிய பல விளையாட்டு அமைப்புகள் இந்த பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

போனி ரைட், கேமிங் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ஃபுட் கோர்ட் மற்றும் பொம்மைகள் விற்கப்படும் கடைகள் போன்றவை இந்த பொழுதுபோக்கு வளாகத்தின் உள்ளே காணப்படுகின்றன.

பண்டிகை நாட்களில் இந்த பொழுதுபோக்குபூங்கா வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிமயமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக நரியல் பூர்ணிமா திருநாள், பழங்குடி நடன நாள், உள்ளூர் திருவிழா நாள் மற்றும் வார இறுதி நாட்களில் இங்கு பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர்.

Please Wait while comments are loading...