வைபவ் வாட்டர் வேர்ல்டு, தமன்

20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வைபவ் வாட்டர் வேர்ல்டு கண்டா வாபி சாலையில் தமன் நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த ரம்மியமான நீர்விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காவை சுற்றிலும் சிக்கூ, தென்னை மற்றும் மாந்தோப்புகள் சூழ்ந்துள்ளன. 36 வகையான நீர்விளையாட்டு சவாரி அமைப்புகளை இந்த பொழுதுபோக்கு பூங்கா கொண்டிருக்கிறது.

குளுமையான சூழலைக்கொண்டுள்ள இந்த பூங்கா 3 வயது முதல் 80 வயது வரையான பார்வையாளர்களை வார இறுதி நாட்களில் ஈர்க்கிறது. முழுக்க முழுக்க நீர் விளையாட்டுகள் தொடர்பான பொழுதுபோக்கு பூங்கா என்பதால் நீரின் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்படுகிறது.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோர் குழுக்களாகவும் இங்கு விஜயம் செய்கின்றனர்.

36 வகையான சவாரி அமைப்புகளில் விளையாடி அலுப்புற்ற பார்வையாளர்களின் பசியை தணிக்கும் வகையில் இங்கு ஒரு உணவகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்பிளாஷ் அன்ட் ஃபன் அன்ட் ஃபுட் என்று அழைக்கப்படும் இந்த உணவகத்தில் பல வகையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. வடா பாவ், பீட்ஸா, தென்னிந்திய உணவு வகைகள், ஃப்ரெஞ்ச் ஃப்ரை, ஐஸ்கிரீம் மற்றும் பஞ்சாபி உணவு வகைகள் போன்றவை இங்கு கிடைக்கின்றன.

Please Wait while comments are loading...