சந்திரபனி எனும் இந்த பிரசித்தமான ஆன்மீக ஸ்தலம் டேராடூன் நகரிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. டேராடூன்-டெல்லி சாலையில் அமைந்திருக்கும் இந்த கோயில் இங்குள்ள கௌதம் குண்ட் எனும் எனும் தீர்த்தத்திற்கு பெயர் பெற்றுள்ளது.
வேத காலத்தை சேர்ந்த 7 முக்கிய ரிஷிகளில் ஒருவரான கௌதம மஹரிஷி இங்கு தன் மனைவி அகலிகை மற்றும் மகள் அஞ்சனி ஆகியோரோடு வசித்ததாக சொல்லப்படுகிறது.
மற்றொரு புராணிகக்கதையின்படி இந்த இடத்தில் கங்காதேவி அவதரித்ததாகவும் சொல்லப்படுகிறது. கௌதம குண்டத்தில் மூழ்கி குளிப்பதற்காகவே இங்கு ஏராளமான யாத்ரீகர்கள் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications