கிளாக் டவர் எனும் இந்த பிரசித்தமான வரலாற்றுச்சின்னம் டேராடூன் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. ராஜ்பூர் சாலையில் உள்ள இந்த மணிக்கூண்டு நகரின் அடையாளங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. சிறந்த வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த மணிக்கூண்டு ஆங்கிலேயர் கால கட்டிடக்கலையின் சான்றாக வீற்றிருக்கிறது.
உள்ளூர் மக்களின் கருத்துப்படி வெகு தூரத்திலிர்ந்தும் மணிக்கூண்டின் மணியோசையை கேட்கலாம் என்பதாக சொல்லப்படுகிறது. அறுமுக வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மணிக்கூண்டில் கடிகாரம் தற்போது வேலை செய்யவில்லை என்றாலும் சுற்றுலாப்பயணிகளும் உள்ளூர் மக்களும் இதனை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.



Click it and Unblock the Notifications