ஃபாரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் எனப்படும் இந்த வன ஆராய்ச்சி மையம் கௌலாகர் சாலையில் அமைந்துள்ளது. 1906ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இம்மையம் 450 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த மையத்தின் கட்டிடம் கிரிக்கோ ரோமன் மற்றும் காலனியக்கட்டிடக்கலை அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வளாகத்தில் வனத்துறை தொடர்பான ஆறு அருங்காட்சியகங்கள் இடம் பெற்றுள்ளன. மரங்கள் அல்லாத காட்டுப்பொருட்கள், மரங்களின் மாதிரிகள், சில்விகல்ச்சர், சமூகக்காடுகள் அமைப்பு, தாவரங்களில் நோய்க்கூறியல் மற்றும் பரிணாமவியல் போன்ற பல்வேறு காட்சிப்பொருட்களை இந்த அருங்காட்சியகங்களில் பார்வையாளர்கள் காணலாம்.
இவை தவிர ஒரு தாவரவியல் தோட்டப்பூங்காவும் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இது பார்வையாளர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்கிறது. அது மட்டுமல்லாமல் இந்திரா காந்தி நேஷனல் ஃபாரெஸ்ட் அகாடமியும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications