Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » ஈர்க்கும் இடங்கள் » இந்தியன் மிலிட்டரி அகாடமி

இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன்

29

இந்தியன் மிலிட்டரி அகாடமி எனும் இந்த ராணுவப்பயிற்சிக்கல்லூரி ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் கல்லூரியாகும். இது 1932ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி 40 இளம் அதிகாரிகளுடன் துவங்கப்பட்டதாகும். பிரிகேடியர் எல்.பி. காலின்ஸ் என்பவர் இந்த ராணுவக்கல்லூரிக்கு முதன்முதலாக தலைமையேற்றுள்ளார்.

1934ம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த ராணுவக்கல்லூரியின் முதல் அதிகாரிகள் தேர்ச்சி பெற்று வெளிவந்தனர். இந்தப்பட்டியலில் ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்‌ஷா, ஜெனரல் முஹம்மத் மூஸா மற்றும் லெஃப்டினண்ட் ஜெனரல் ஸ்மித் டுன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் மூவருமே பிந்நாளில் முறையே இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா போன்ற சுதந்திர நாடுகளில் மிக முக்கியமான ராணுவப்பதவிகளை வகித்தனர். 1950ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ராணுவக்கல்லூரி நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த அகாடமி பின்னர் புனேயிலுள்ள கடாக்வாஸ்லா எனும் இடத்துக்கு மாற்றப்பட்டபின்னர் இந்த பயிற்சிக்கல்லூரி திரும்பவும் மிலிட்டரி காலேஜ் என்ற பெயரை பெற்றது.

இந்த கல்லூரி வளாகத்தில் துப்பாக்கி சுடும் கலை குறித்த காட்சி விளக்க கூடம், ஒரு அருங்காட்சியகம், 18 குழி FRIMS கோல்ஃப் மைதானம் மற்றும் ஒரு போர் நினைவுச்சின்னம் ஆகியவை அமைந்திருக்கின்றன.

இது ஒரு பிரத்யேக ஹெலிகாப்டர் தளத்தையும் கொண்டிருக்கிறது. வடமேற்கு திசையில் டூன்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ஹெலிபேட் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed

Near by City