லச்சிவால எனும் இந்த இடம் டேராடூன் நகரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இப்பகுதியிலுள்ள முக்கியமான பிக்னிக் ஸ்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றிருக்கிறது.
சல் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதியால் சூழப்பட்டிருக்கும் இந்த இடம் இயற்கை அழகோடு ஒளிர்கிறது. இங்குள்ள சுஸ்வா ஆற்றுக்குளம் பயணிகள் விரும்பி ரசிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகிலேயே உள்ள ஒரு பெரிய பூங்காவும் குழந்தைகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications