டேராடூன் நகரத்தின் ஒரு முக்கியமான ஆன்மீக மையமாக இந்த சாய் தர்பார் கோயில் புகழ் பெற்றுள்ளல்து. இதில் எல்லா மதப்பிரிவினரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
சாய் பாபா போதித்த மத நல்லிணக்க நெறிகளின் அடையாளமாக இந்த கோயில் வீற்றிருக்கிறது. ராஜ்பூர் சாலையில் கிளாக் டவர் மணிக்கூண்டிலிருந்து 8 கி.மீ தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
அழகும் அமைதியும் தவழும் சூழலின் நடுவே இந்த சலவைக்கல்லால் கட்டப்பட்ட இந்த கோயில் வீற்றுள்ளது. மாலை நேரத்தில் இங்கு பூஜைச்சடங்குகள் செய்விக்கப்படுகின்றன. ஆன்மீக சாந்தம் நிலவும் இந்த கோயில் ஸ்தலம் அமைதியை நாடுவோர்க்கு மிகவும் ஏற்றதாகும்.



Click it and Unblock the Notifications