சந்தளா தேவி கோயில் டேராடூன் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஜய்துண்வாலா எனும் இடம் வரை பயணிகள் பேருந்தில் பயணித்து அங்கிருந்து பஞ்சாபிவாலா எனும் இடத்திற்கு வாகனத்தில் சென்று அதன்பின்னர் 2 கி.மீ மலையேற்றம் செய்து பயணிகள் இந்த கோயிலுக்கு வரவேண்டியுள்ளது.
உள்ளூர் கதைகளின்படி, சந்தளா தேவி மற்றும் அவரது சகோதரர் இருவரும் முகலாயர்களை வெல்ல முடியாது என்றுணர்ந்த நிலையில் இந்த இடத்தில் தங்கள் ஆயுதங்களை வீசிவிட்டு இந்த இடத்தில் பிரார்த்தித்ததாகவும் அதன் பின் அவர்கள் தெய்வீக அருளினால் சிலைகளாக மாறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இங்கு பெருமளவில் பக்தர்கள் விஜயம் செய்கின்றனர். அதுவே சந்தளா தேவி சிலையாக மாறிய கிழமையாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications