Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டேராடூன் » ஈர்க்கும் இடங்கள் » வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி

வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி, டேராடூன்

29

வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி எனப்படும் இந்த தன்னாட்சி அதிகாரம் கொண்ட மையம் டேராடூன் நகரத்தில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

1968ம் ஆண்டு துவங்கப்பட்ட இது முன்னர் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த மையத்தை தோற்றுவித்த பேராசிரியர் டி. என். வாடியா என்பவரை கௌரவிக்கும் விதமாக வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் முக்கியத்துவம் கொண்ட ஒரு ஆய்வு மையமாக விளங்கும் இந்த அமையம் ஹிமாலய புவியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறது.

நில அதிர்வு அளவைக்கருவிகள், இயற்கை மூலாதாரப்பொருட்கள், மலை உருவாக்கம் மற்றும் புவியியக்க பரிணாமம் தொடர்பான பல பிரிவுகளில் இந்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

தற்போது இந்த மையத்தில் 65 தொழில்நுட்ப ஊழியர்களும், 61 விஞ்ஞானிகளும் 76 துணை நிலை ஆய்வாளர்களும் பணியாற்றுகின்றனர்.

இந்த மையத்திலுள்ள நூலகத்தில் பல அரிய நூல்கள் மற்றும் ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், ஒரு அருங்காட்சியகமும் இந்த மலை ஆராய்ச்சி மைய வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri

Near by City