எப்படி அடைவது

அருகிலுள்ள எல்லா மாநிலங்களின் முக்கிய நகரங்களிலிருந்தும் டெல்லி மாநகருக்கு அரசாங்க பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலிருந்து நேரடி பேருந்துச்சேவைகள் டெல்லிக்கு இல்லை. இருப்பினும் சொந்த வாகனம் இருந்தால் ஆர்வமும் தயார் நிலையும் கொண்டவர்கள் பிற சுற்றுலாத்தலங்களையும் இணைத்த நீண்டதொரு சுற்றுலாப்பயணத்தில் ஈடுபடலாம். 5 தேசிய நெடுஞ்சாலைகள் டெல்லி நகரத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தூர், ஜெய்பூர், உதய்பூர், குவாலியர் போன்ற நகரங்களிலிருந்து டெல்லி மாநகரத்துக்கு சொகுசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.