Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » டெல்லி » வானிலை

டெல்லி வானிலை

வருடம் முழுவதும் மிகக்கடுமையான தட்பவெப்ப நிலையை டெல்லி மாநகரம் பெற்றுள்ளது. மிக உஷ்ணமான கோடைக்காலம் மற்றும் மிகக்கடுமையான குளிர் நிலவும் குளிர்காலம் போன்றவற்றை இது கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவம் டெல்லிக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

டெல்லி மாநகரப்பகுதியில் ஏப்ரல் மாதத்தில் துவங்கி ஜுலை மாதத்தின் பாதி வரை கோடைக்காலம் நிலவுகிறது. குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களில் மிக அதிகபட்சமான 49° C  வரை இங்கு வெப்பநிலை உயரக்கூடும் என்பது பயணிகள் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும். எனவே மிகக்கடுமையான வெப்பநிலை நிலவும் கோடைக்காலத்தில் டெல்லி மாநகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது நிச்சயமாக தவிர்க்க வேண்டிய ஒன்று.

மழைக்காலம்

டெல்லி மாநகரப்பகுதியில் ஜுலை மாத மத்தியில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் மாதத்தின் பாதி வரை நீள்கிறது. பொதுவாக டெல்லி பிரதேசத்தின் வருடாந்திர மழைப்பொழிவு 714 மி.மீ என்ற அளவில் காணப்படுகிறது. மழைக்காலத்தில் இப்பகுதி ஈரப்பதம் நிரம்பிய சூழலைக்கொண்டிருக்கும் என்பதால் இப்பருவமும் சுற்றுலாவுக்கு உகந்ததல்ல.

குளிர்காலம்

டெல்லி மாநகரப்பகுதியில் நவம்பர் மாத மத்தியில்  துவங்கும் குளிர்காலமானது டிசம்பர் மாதத்தில் அதன் உச்சத்திற்கு சென்று ஜனவரி வரை கடுங்குளிருடன் காட்சியளிக்கிறது. இக்காலத்தில் 4° C  வரையில் வெப்பநிலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மார்ச் மாதம் வரை டெல்லி மாநகரத்தில் குளிர்காலம் நீடிக்கிறது. விசேஷமான குளிர் ஆடைகளுடன்,  இரவில் நிலவும் கடுங்குளிருக்கு எல்லாவகையிலும் தயாராக தங்கள் சுற்றுலாப்பயணத்தை பயணிகள் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.