தேஷ்நோக் கிராமத்திற்கு அருகில் இருக்கும் உள்நாட்டு விமான நிலையமாக ஜோத்பூரும், வெளிநாட்டு விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையமும் அறியப்படுகின்றன. இதில் டெல்லி விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, சென்னை, பெங்களுர், மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு ஜோத்பூர் மற்றும் டெல்லி விமான நிலையங்களிலிருந்து நீங்கள் வெகுசுலபமாக வாடகை கார்கள் மூலம் தேஷ்நோக் நகரை அடைந்து விட முடியும்.