ரவிஷங்கர் அணை என்றும் அழைக்கப்படும் இந்த கங்க்ரேல் அணை தம்தரி மாவட்டத்திலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் இந்த அணை 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது.
இந்த அணையின் ஒரு அங்கமாக கங்க்ரேல் நீர் மின்னுற்பத்தி திட்டம் செயல்படுகிறது. இது இப்பகுதியின் மின்சாரத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மற்றும் மிக நீளமான அணையாக இந்த கங்க்ரேல் அணை அமைந்திருக்கிறது.